பொது செய்தி

இந்தியா

காதல் விவகாரத்தால் அதிகரிக்கும் கொலை சம்பவங்கள்

Updated : நவ 19, 2019 | Added : நவ 19, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
கொலை, காதல், வன்முறை, சொத்து பிரச்னை, அதிகரிப்பு,

புதுடில்லி : கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மட்டும் அல்லாமல், உலக அளவில், கொலை சம்பவங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால், காதல் விவகாரத்தில் கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.

கடந்த 2001 முதல் 2007 வரை நடந்த குற்றசம்பவங்கள் தொடர்பாக என்சிஆர்பி புள்ளி விவரத்தில், கடந்த 2001 ல் 36,202 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இது, 2017 ல் 28,653 ஆக சரிந்துள்ளது. இது 21 சதவீதம் குறைவாகும். இதே காலகட்டத்தில், தனி நபர் விரோதம் காரணமாக நடந்த கொலை சம்பவங்கள் 4.3 சதவீதமும், சொத்து விவகாரத்தில் நடந்த கொலை சம்பவங்கள் 12 சதவீதமும் குறைந்துள்ளது. ஆனால், காதல் விவகாரத்தில் நடந்த கொலை சம்பவங்கள் 28 சதவீதம் அதிகரித்துள்ளது.


latest tamil news
கடந்த 2001 முதல் 2017 வரை நடந்த கொலை சம்பவங்கள்:

தனி நபர் விரோதம் காரணமாக - 67,774

சொத்து பிரச்னைக்காக - 51,554

காதல் விவகாரத்தில் 44,412 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.

இருப்பினும், கடந்த 2017 ல் காதல் காரணங்களுக்காக நடந்த கொலை சம்பவங்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.


காதல் விவகாரத்தில்,


2015ல், 1,379

2016ல் 1,493

2017 ல் 1,390 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.


4 மாநிலங்களில் முன்னிலைஇந்தியாவில் நான்கு மாநிலங்களில், கொலைக்கான முக்கிய காரணங்களில் காதல் தான் முதலிடத்தில் உள்ளது. காதல் விவகாரத்தில், அதிக கொலை நடக்கும் மாநிலங்களில், உ.பி., உள்ளது. இங்கு ஆண்டுதோறும், 385 பேர் கொலை செய்யப்படுகின்றனர். ஆந்திராவில்(தெலுங்கானாவை சேர்த்து) ஆண்டுதோறும் , காதல் விவகாரத்தில், சராசரியாக 384 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. சராசரியாக தினசரி ஒரு கொலை நடந்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களில், தமிழகம், கர்நாடகா, மற்றும் டில்லி உள்ளன. சத்தீஸ்கர், ஒடிசா, மத்தி ய பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், பீஹார், ஜார்க்கண்ட் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில், கொலைக்கான முக்கிய காரணமாக காதல் விவகாரம் 3வது அல்லது 4வது இடத்தில் உள்ளது.

கடந்த 2001 முதல் 2017 வரை நடந்த கொலைகளும், கொலைக்கான காரணங்களும்


ஆந்திராவில்,காதல் விவகாரம் காரணமாக - 384

தனி நபர் விரோதம் காரணமாக - 276

சொத்து பிரச்னை காரணமாக - 176
ஆதாயத்திற்காக - 171
வரதட்சணைக்காக - 124 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.


மஹாராஷ்டிராவில்காதல் விவகாரத்தில் - 277

தனி நபர் விரோதம் - 193

சொத்து பிரச்னை - 139

ஆதாயத்திற்காக - 71

வரதட்சணைக்காக - 101 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.


குஜராத்காதல் விவகாரத்தில் - 156

தனி நபர் விரோதம் - 151

சொத்து பிரச்னை - 101

ஆதாயத்திற்காக - 68

ஜாதி பிரச்னை- 18 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.


பஞ்சாபில்காதல் விவகாரத்தில் - 98

தனி நபர் விரோதம் - 50

சொத்து பிரச்னை - 71

ஆதாயத்திற்காக - 13

வரதட்சணைக்காக -8 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.


உ.பி.,யில்காதல் விவகாரத்தில் - 394

தனி நபர் விரோதம் - 553

சொத்து பிரச்னை - 270

ஆதாயத்திற்காக - 184


தமிழகம்காதல் விவகாரத்தில் - 240

தனி நபர் விரோதம் - 335

சொத்து பிரச்னை - 133

ஆதாயத்திற்காக - 105

வரதட்சணைக்காக - 10 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.


கர்நாடகாகாதல் விவகாரத்தில் - 113

தனி நபர் விரோதம் - 156

சொத்து பிரச்னை - 87

ஆதாயத்திற்காக - 61

வரதட்சணைக்காக - 49 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.


டில்லிகாதல் விவகாரத்தில் - 51

தனி நபர் விரோதம் - 68

சொத்து பிரச்னை - 35

ஆதாயத்திற்காக - 29

வரதட்சணைக்காக -13 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.


குறைவுமேற்கு வங்கம், கேரளா மாநிலங்களில் தான் காதல் விவகாரத்தில், குறைந்தளவு கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. மேற்கு வங்கத்தில் 29, கேரளாவில் 6 கொலை சம்பவங்களும் நடந்துள்ளன.


முக்கிய காரணம்போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
காதல் விவகாரத்தில் நடந்த கொலை சம்பவங்களுக்கு, கள்ளக்காதல் முக்கிய காரணம் அதேநேரத்தில், கவுரவ கொலை சம்பவங்களும் அதிகரிக்க துவங்கியுள்ளது. 2016 ல் 71 பேரும், 2017 ல் 92 பேரும் கவுரவ கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - என்னை மேலும் பிரபலப்படுத்திய போலிக்கு நன்றி ,இந்தியா
20-நவ-201907:53:29 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ மேற்கு வங்கம், கேரளா மாநிலங்களில் தான் காதல் விவகாரத்தில், குறைந்தளவு கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. மேற்கு வங்கத்தில் 29, கேரளாவில் 6 கொலை சம்பவங்களும் நடந்துள்ளன. //// ரெண்டுமே செவப்பு ஆண்ட, ஆளுற மாநிலங்கள் ஆச்சே ???? உனக்கும் வேணுமா ? காக்காக்கடி கடிச்சுக்க -ன்னு அட்ஜஸ்ட் பண்ணிப்போறானுவளோ ??
Rate this:
Share this comment
Cancel
Balu - Mumbai,இந்தியா
20-நவ-201907:13:58 IST Report Abuse
Balu கேரளா & மேற்கு வங்கம் காதல் கொலைகள் குறைவு, காரணம் அங்கு சினிமா குறைவு. ஆந்திரா, தமிழ் நாடு, உத்தர பிரதேஷ் எல்லாம் சினிமா காரிகள் பின்னாடி, அவர்கள் சொல்லுவது தான் வேத வாக்கு என்று காதல், கத்தரிக்காய் என்று இல்லாவிட்டால் வாழ்கை இல்லை என்று ஒரு கற்பனை உலகத்தில் சஞ்சரிக்கிறார்கள். ஆந்திரா ஒரு படி மேல, இந்த நடிகர்களை விமர்சனம் செய்ததினால் ஒருவரை அந்த நடிகனின் ரசிகர்கள் குத்தி கொலை கூட செய்து விட்டார்கள், அவ்வளவு மு பசங்கள். படத்தில் காதலை சினமா காரங்கள் அடி குடுத்தாலும் விடமாட்டார்கள், அரைச்ச மாவை எத்தனை முறை அரைத்தாலும், இந்த மு பயன்கள் திரும்ப திரும்ப பார்த்து மனதில் காதல் சபலம் ஏற்பட்டு, லவ் பண்ண ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் பெண்கள் அந்த அளவு ஆண்களை போல காதலில் ஈர்ப்பது இல்லை, கலாச்சாரம், கருத்தரிப்பு, பயம் முதலான காரணங்களினால் பெண்கள் ஆண்களை போல் சுகந்திரமாக காதலுக்கு வருவது இல்லை. காதலித்து கைவிட்டுவிட்டால் அதிகம் பாதிப்பது பெண்கள் தான். எனவே அவர்கள் ஆண்கள் ஏதோ ஒரு சினிமா கற்பனைகளில் வந்து பெண்களை காதல் பண்ண சொன்னால் அவர்கள் முடியாது என்று தான் சொல்வார்கள். அப்போது நம்ம சினிமா pait பிடித்த ஆண் கையில் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சினிமா பாணியில் குத்திவிட்டு, வாழ்க்கையை பாழடித்து சிறையில் வாழ்கிறார்கள். அந்த சினிமா பொறம்போக்கு நடிகர் அல்லது நடிகைகள் கோடி கோடியாய் பங்களா, கார் என வலம் வருவார்கள். இந்த ரசிக நாய், படிப்பையும் இழந்து, ஒருத்தியின் வாழ்க்கையின் கதையை முடித்து விட்டு, சிறையில் கம்பி எண்ணிவிட்டு இருப்பான். திருந்துங்கடா. அந்த சினிமா காரங்களுக்கு காதல் ஒரு பொழைப்பு. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவனுகள் காதலை வைத்து காசு பண்ணி கொண்டு இருப்பான். படம் பொழுதுபோக்குக்கு பார்த்து விட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்தபிறகு மறந்து விட்டு ஒழுங்கா படிக்க வழி பாரு, ஆயிரம் பெண்கள் கியூவில் நிற்கும்.
Rate this:
Share this comment
Cancel
20-நவ-201907:00:07 IST Report Abuse
chandran Illegal relationship be the reason. One has to live according to our culture. Educate our children about deciplined life. Nowadays cinema and TV serials not only damaged our culture but inducing everybody mind by detailed shows of various technics and plans of how to murder, can have illegal relationships, planning for rape (Sun TV Kalyana veedu) and how to spoil the relationship. People should be vigilant otherwise these incidents couldnt be avoided.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X