அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசியலில் இணைந்து செயல்பட தயார்: ரஜினி, கமல் திடீர் அறிவிப்பு

Updated : நவ 20, 2019 | Added : நவ 19, 2019 | கருத்துகள் (47+ 69)
Advertisement
அரசியல், இணைந்து, செயல்பட, தயார், ரஜினி, கமல்

சென்னை: ''இணைந்து செயல்பட வேண்டிய சூழ்நிலை வந்தால், நிச்சயம் இணைவோம்,'' என, நடிகர்கள் ரஜினியும், கமலும் அடுத்தடுத்து அளித்த பேட்டி, அரசியல் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.

திரைத்துறையில், சிவாஜி, எம்.ஜி.ஆருக்கு பின், நடிகர்கள் ரஜினி, கமல் கொடிகட்டி பறந்தனர். இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் ரஜினி, அவ்வப்போது, அரசியல் கருத்துக்களை வெளியிட்டு வந்தார். 1996ல், ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தார். 'அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது' என, அவர் கூறியது, அ.தி.மு.க., ஆட்சியை, வீட்டுக்கு அனுப்பியது.

அதைத் தொடர்ந்து, ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. மவுனம் காத்து வந்த அவர், ஜெயலலிதா மறைந்ததும், அரசியலுக்கு வரப்போவதாக வெளிப்படையாக அறிவித்தார். அதுவரை, 'அரசியலுக்கும், எனக்கும் ஒத்துவராது' எனக்கூறி வந்த, நடிகர் கமல், திடீரென மக்கள் நீதி மையம் கட்சியை துவக்கினார். அவரது கட்சி, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டது; கணிசமான ஓட்டுகளை, அவர் கட்சி வேட்பாளர்கள் பெற்றனர்.

அதையடுத்து, 2021 சட்டசபை தேர்தலில் களம் இறங்குவேன் என, ரஜினியும் அறிவித்தார். அவர் தனிக்கட்சி துவக்கினால், திராவிட கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., தலைவர்கள், அவர் எந்த கருத்து தெரிவித்தாலும், அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், ரஜினியும், கமலும் இணைந்து செயல்பட, சிலர் முயற்சித்து வருவதாக, தகவல் வெளியானது. இருவரும் வெவ்வேறு கொள்கைகளை உடையவர்கள். எனவே, இணைய மாட்டார்கள் என்று, அரசியல் வட்டாரம் நம்பியது.அதை பொய்யாக்கும் வகையில், நேற்று இருவருடைய பேட்டியும் அமைந்தது. ஒடிசா பல்கலையில், டாக்டர் பட்டம் பெற்று திரும்பிய நடிகர் கமல், சென்னை விமான நிலையத்தில், பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது: இந்தியாவிலே முதன்மையாக, திறன் மேம்பாட்டு பல்கலையில், எனக்கு டாக்டர் பட்டம் வழங்கி உள்ளனர். அங்கு படிக்காதவர்களுக்கு வழங்கப்பட்ட, முதல் டாக்டர் பட்டம். ஒடிசா முதல்வர் கையில் வாங்கியது, பெருமையாக உள்ளது.நானும், ரஜினியும் இணைவதில், அதிசயம் எதுவும் இல்லை. 44 ஆண்டுகளாக இணைந்து தான் உள்ளோம். அரசியலில் இணையும் அவசியம் வந்தால், கண்டிப்பாக சொல்கிறோம். தற்போது வேலை தான் முக்கியம். இதை பேச வேண்டியதில்லை.

தமிழகத்தின் மேம்பாட்டிற்காக, இருவரும் சேர்ந்து பயணிக்க வேண்டியது வந்தால் பயணிப்போம். இலங்கையில், கோத்தபய ராஜபக்சே, நல்ல தலைவராக இருக்க விரும்பினால், நியாயமான ஆட்சியை கொடுக்க வேண்டியது, அவரது கடமை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், எல்லா மக்களுக்கும் சமமான நியாயம் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

கோவா செல்வதற்காக, சென்னை விமான நிலையம் வந்த ரஜினியிடம், கமல் கருத்து குறித்து கேட்டபோது, ''மக்கள் நலனுக்காக, நானும், கமலும் இணைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், நிச்சயமாக இணைவோம்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (47+ 69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naren - Chennai,இந்தியா
20-நவ-201922:01:41 IST Report Abuse
Naren தமிழக வாக்காளர்களை ரஜினி,கமல் போல் எவரும் இவ்வளவு கேவல படுத்திவிட முடியாது. காதுல பூ வைத்திருக்கும் கேனயன் என்று நினைத்து விட்டார்கள் போல் தெரிகிறது இவர்களை பின்னாலிருந்து இயக்குபவர்கள். அல்லது ஜெயிக்க ஒரு காரணம் மட்டும் போதும் என்று நினைக்கிறார்களோ என்னவோ?
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
20-நவ-201914:58:41 IST Report Abuse
dandy உலகில் ஆக கூடிய கை நாட்டுகள் வாழும் டாஸ்மாக் நாட்டு மக்கள் இந்த இரண்டு பிறவிகளை முதல் ..அமைச்சர் ..துணை அமைச்சர் ஆக அமர வைத்தாலும் ஆச்சரியம் இல்லை .எங்களுக்கு தேவை குவார்ட்டர் + பிரியாணி
Rate this:
Share this comment
Cancel
20-நவ-201914:51:28 IST Report Abuse
ravichandranl இரண்டு சனியின்கள் தமிழ்நாடு தாங்காது. இது தான் சிஸ்டமா டுபாக்கூர். இரண்டு அயோக்கியர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X