எதிர்க்கட்சி எம்.பி.,,க்கள் எதிர்ப்பு: மாறுகிறது, 'மார்ஷல்' சீருடை

Updated : நவ 21, 2019 | Added : நவ 19, 2019 | கருத்துகள் (4+ 7)
Advertisement
எதிர்க்கட்சி,எதிர்ப்பு,மாறுகிறது, மார்ஷல், சீருடை

புதுடில்லி: ராஜ்யசபாவில், 'மார்ஷல்'களுக்கான சீருடை, ராணுவ சீருடை போல மாற்றப்பட்டதற்கு, எதிர்க்கட்சி, எம்.பி.,க்களும், முன்னாள் ராணுவ அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, 'சீருடைய மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்யசபாவில் பணியாற்றும், 'மார்ஷல்' எனப்படும், சபை காவலர்களுக்கான சீரூடை மாற்றப்பட்டுள்ளது. இதுவரை, மார்ஷல்கள், முழு நீள கோர்ட் மற்றும் தலைப்பாகை அணிந்திருந்தனர். தற்போது ராணுவத்தினர் போன்ற சீருடை மற்றும் தொப்பி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, ராஜ்யசபாவில் நேற்று கடும் எதிர்ப்பு எழுந்தது.

காங்கிரஸ் உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ், ''சீருடையை ஏன் மாற்றினீர்கள்... ஒருவேளை, ராஜ்யசபாவில் ராணுவ சட்டம் அமலுக்கு வந்து விட்டதா,'' என, கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த, சபை தலைவர் வெங்கையா நாயுடு, ''முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தில், முக்கியத்துவம் இல்லாத கேள்விகளை கேட்காதீர்கள்,'' என்றார். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மற்ற எம்.பி.,க்களும், சீருடை மாற்றத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இது குறித்து வெங்கையா நாயுடு கூறியதாவது:சீருடை மாற்றப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். வேறு சில தரப்பிலிருந்தும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மார்ஷல்களில் சீருடையை மீண்டும் மாற்றுவது குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கும்படி, ராஜ்யசபா செயலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும், சீருடை மாற்றத்துக்கு, சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (4+ 7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-நவ-201921:16:19 IST Report Abuse
யாரோ பேசாமல் நம்ம வெங்கிக்கும் மார்ஷல் சீருடை கொடுத்தால் என்ன? பொருத்தமாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20-நவ-201907:23:29 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஜனநாயக நாட்டில் எதற்கு டவாலி, ஆர்டர்லி, மார்ஷல் என்று கோமாளி வேடமிட்டு ஒருவர் இன்னொருவருக்கு ஊழியம் செய்யணும்? அரசாங்கம் வெட்கி தலை குனியவேண்டும்.
Rate this:
Share this comment
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-நவ-201910:49:06 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyanஜைஹிந்த் புறம் காதர், MP, மார்ஷல் கு வித்தியாசம் தேவை, எல்லோரும் same மாடல் டிரஸ் ல் இருந்தால் , யார் காவல் காரன், யார் mp என்று தெரியாது , எந்த தொழில் செய்ய, எந்த டிரஸ் என்பது ரூல், சோ follow ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்...
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
20-நவ-201904:33:27 IST Report Abuse
blocked user அவைக்காவலர்களாக இராணுவத்தினரை நியமிக்கலாம். பல காலமாக அமளி செய்வதே தொழிலாக சில காட்சிகள் செய்து வருகின்றன. இனி வம்பு செய்வோரை தரதர என்று இழுத்து வெளியே போட்டுவிட புதிதாக நடைமுறைகளை கொண்டு வரலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X