பா.ஜ., - எம்.பி.,க்கள் கூட்டத்தில் அமைச்சர்கள் என்ன பேசினர்?

Updated : நவ 21, 2019 | Added : நவ 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement
BJP, MP, பா.ஜ., எம்.பி., கூட்டம், அமைச்சர்கள், என்ன பேசினர்?

புதுடில்லி,: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் துவங்கியுள்ளது. இந்த நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த எம்.பி.,க்களின் கூட்டம் நேற்று நடந்தது. அதில், பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது.

பா.ஜ., - எம்.பி.,க்கள் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. பா.ஜ., தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி இதில் பங்கேற்கவில்லை.


விளக்கம்


இந்தக் கூட்டத்தில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர், எம்.பி.,க்களுக்கு விளக்கம் அளித்தனர்.இது குறித்து, கட்சி மூத்த தலைவர்கள் கூறியதாவது:எம்.பி.,க்கள் கூட்டத்தில், பிரதமர் மேற்கொண்ட பல்வேறு வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விவரிக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ஐ.நா., பொது சபை கூட்டத்தில் மோடியின் பேச்சு குறித்து விளக்கப்பட்டது.

மேலும், அமெரிக்க வாழ் இந்தியர்களுடனான 'ஹவ்டி மோடி' சந்திப்பு நிகழ்ச்சி குறித்தும், அதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்றது குறித்தும் தெரிவிக்கப்பட்டது.இதைத் தவிர, ஆசியான், பிரிக்ஸ் போன்ற அமைப்புகள் கூட்டத்தில் பங்கேற்றது குறித்தும், ரஷ்யா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு மோடி மேற்கொண்ட பயணத்தின் நோக்கம் குறித்தும் விளக்கப்பட்டது.

ஆசியான் நாடுகள் உட்பட, 16 நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள, 'ஆர்செப்' அமைப்பின் தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் மோடி கையெழுத்திட மறுத்தது குறித்து தெரிவிக்கப்பட்டது.


பிரச்னை


நாட்டின் நலனுக்கு எதிரான அம்சங்கள் இருந்ததால், அந்த ஒப்பந்தத்தில் இணைய மறுக்கப்பட்டது குறித்தும் தெரிவிக்கப்பட்டது.இதைத் தவிர, நாட்டின் பொருளாதாரம் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மஹாத்மா காந்தியின், 150வது பிறந்தநாளையொட்டி தங்களுடைய தொகுதியில் நடத்தப்பட்ட பாத யாத்திரை நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்களை தெரிவிக்கும்படி, அனைத்து எம்.பி.,க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
20-நவ-201904:35:42 IST Report Abuse
blocked user பிரதமர் வர்த்தகத்தை வளர்க்க பெரும்பாடுபடுகிறார் என்பதை புரிந்து கொள்ளாத இவர்களுக்கு பாடம் வேறு நடத்தவேண்டியுள்ளது... தினமும் 18 மணி நேரம் உழைத்தால் புரியும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X