அரசியல் செய்தி

தமிழ்நாடு

பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் வி.ஆர்.எஸ்.,

Updated : நவ 20, 2019 | Added : நவ 19, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை: தமிழக அரசு பள்ளிகளில், மாணவர் விகிதத்தை விட, 12 ஆயிரம் ஆசிரியர்கள் அதிகமாக உள்ளதால், விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், ஆசிரியர்கள் நியமனத்துக்கு தனித்தனி விதிகள் பின்பற்றப்படுகின்றன. தொடக்க பள்ளிகளுக்கு, ஒவ்வொரு
school, teachers, VRS, பள்ளி ஆசிரியர்கள், விரைவில், வி.ஆர்.எஸ்.,

சென்னை: தமிழக அரசு பள்ளிகளில், மாணவர் விகிதத்தை விட, 12 ஆயிரம் ஆசிரியர்கள் அதிகமாக உள்ளதால், விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், ஆசிரியர்கள் நியமனத்துக்கு தனித்தனி விதிகள் பின்பற்றப்
படுகின்றன. தொடக்க பள்ளிகளுக்கு, ஒவ்வொரு வகுப்பிலும், மாணவர் எண்ணிக்கைக்கு விகிதத்துக்கு ஏற்ப, ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.


பட்டியல் தயாரிப்பு



நடுநிலை முதல் மேல்நிலை பள்ளிகள் வரையிலும், மாணவர் எண்ணிக்கை மட்டுமின்றி, பாட வாரியாகவும் கணக்கிட்டு, ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பள்ளிகளில், நிரந்தர பணி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து, பள்ளி கல்வித்துறை பட்டியல் தயாரித்து உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், பள்ளிகள், பாட வாரியாக மற்றும் வகுப்புகள் வாரியாகவும், மாணவர்களின் எண்ணிக்கை விகிதத்தின் படியும், இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும், 12 ஆயிரம் ஆசிரியர்கள், தேவைக்கு அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்வி ஆண்டும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதால், ஆசிரியர்களின் தேவை குறைந்து, ஆசிரியர்கள் உபரியாக இருப்பது அதிகரித்து உள்ளது. இந்த எண்ணிக்கையால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.


நடவடிக்கை



உபரி ஆசிரியர்களால், அரசுக்கு பல கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டு வருகிறது.எனவே, செலவை ஈடுகட்டும் வகையில், இந்த ஆசிரியர்களை, பள்ளி கல்வியின் நிர்வாக பணிகள், ஒருங்கிணைந்த கல்வி திட்டம் உள்ளிட்டவற்றில், மாற்று பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

திருச்சியில் தகவல்அதேபோல, ஆசிரியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ள ஆசிரியர்களுக்கு, வி.ஆர்.எஸ்., என்ற விருப்ப ஓய்வு திட்டம் வர உள்ளது. திருச்சியில், விளையாட்டு துறை நிகழ்ச்சியில் பங்கேற்ற, அமைச்சர் செங்கோட்டையன், இதை அறிவித்துஉள்ளார்.

பள்ளி கல்வியில், 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி விட்டு, சுய விருப்பத்துடன் ஓய்வுபெற விரும்பினால், அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என, தெரிகிறது. இதற்கான உத்தரவு, விரைவில் வர உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rmr - chennai,இந்தியா
22-நவ-201908:21:42 IST Report Abuse
rmr ஆசிரியர்கள் சம்பளம் 60000 , 80000 என்று எல்லாம் கண்ணா பின்னான்னு உள்ளது , இப்படி உயர்த்தியது அந்த திருட்டு முன்னேற்ற கழகம் தான் ,அதனால தான் இந்த பிரச்சனை . அரசுக்கு இதனால் நஷ்டம் தான் தனியார் பள்ளிகளில் அவ்வளவு கொடுப்பது இல்லை இருந்தாலும் அங்கு வேலை ஒழுங்கா நடக்குது அரசு பள்ளிகளில் அது இல்லை என்பதே உண்மை
Rate this:
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
22-நவ-201913:25:14 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன்உங்க பிள்ளைகள் அரசு பள்ளியில் படிக்கிறார்களா. அரசு பள்ளிக்கு ஏதேனும் உதவிகள் செய்தது உண்டா? அரசுப்பள்ளிக்கு சென்று அங்கு என்ன நடக்கிறது என்பதை ஒரு நாள் பார்க்கவும்....
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
22-நவ-201900:38:52 IST Report Abuse
Aarkay உங்களுக்கு VRS எப்போ? வெறும் ஐந்து வருடங்கள் பதவி சுகம் அனுபவித்தற்கே, ஆயுள் முழுவதும், பென்சன், போக்குவரத்து, மருத்துவ சலுகைகள், இன்னும் பல....
Rate this:
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
20-நவ-201918:19:09 IST Report Abuse
muthu Rajendran TNPSC மூலம் ஆசிரியர்கள் 1984 வரை தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் அதை மாற்றியது அதிமுக அரசு அமைச்சர் அரங்கநாயகம் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X