நிலத் தகராறில் 9 பேர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலத் தகராறில் 9 பேர் மீது வழக்கு

Added : நவ 19, 2019
Share
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே நிலம் தொடர்பான முன்விரோத தகராறில் இருவரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த கீழ்நாராயப்பனுார் காட்டுகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் மணிகண்டன், 31; இவரது உறவினர் பெரியதம்பி. இருவருக்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், கடந்த 18ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால்,

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே நிலம் தொடர்பான முன்விரோத தகராறில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த கீழ்நாராயப்பனுார் காட்டுகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் மணிகண்டன், 31; இவரது உறவினர் பெரியதம்பி. இருவருக்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், கடந்த 18ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த இரு குடும்பத்தினரும் தாக்கி கொண்டனர்.இது குறித்து இரு தரப்பு புகார்களின் பேரில், வரஞ்சரம் போலீசார், பெரியதம்பி, சாமிதுரை, 30; பரமேஸ்வரி, பெரியம்மாள், லட்சுமி, மணிகண்டன், சித்ரா, புஷ்பா, கலியபெருமாள் ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிந்து சாமிதுரை, மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X