சம்பவம் செய்தி

தமிழ்நாடு

63 வயது பெண்ணுக்கு ஆந்திர வாலிபரின் இதயம்

Added : நவ 19, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை:மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம், ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டு, சென்னை, எம்.ஜி.எம்., மருத்துவமனையில், 63 வயது பெண்ணுக்கு பொருத்தப்பட்டு உள்ளது.

மும்பையை சேர்ந்த, 63 வயது பெண், இதய பாதிப்பு காரணமாக, சென்னை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள, எம்.ஜி.எம்., மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனையில், 'கார்டியோமையோபதி' எனப்படும், இதய தசை பிரச்னை இருப்பது தெரிய வந்தது. மேலும், ரத்த நாளங்களும் சரிவர செயல்படாமல் இருந்தன.இதையடுத்து, அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. உறுப்பு தானம் பெறுபவர்களின் பட்டியலில், அவரது பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில், 33 வயது வாலிபர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் அளிக்க, உறவினர்கள் முன்வந்தனர்.அதன்பின், விசாகப்பட்டினத்தில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வாலிபரின் இதயத்தை, சென்னைக்கு கொண்டு வந்து, அப்பெண்ணுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. விமானம் வாயிலாக, இதயம் எடுத்து வரப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து, எம்.ஜி.எம்., மருத்துவமனைக்கு, போக்குவரத்து போலீஸ் உதவியுடன், 19 நிமிடங்களில் எடுத்து வரப்பட்டது.மருத்துவமனையில் தயாராக இருந்த, இதய மாற்று அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் பாலகிருஷ்ணன், டாக்டர்கள் சுரேஷ் ராவ், ஸ்ரீநாத், கணபதி சுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய குழுவினர், 63 வயது பெண்ணுக்கு, இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-நவ-201902:33:14 IST Report Abuse
தமிழ்வேல் வாழ்க பல்லாண்டு...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-நவ-201902:32:54 IST Report Abuse
தமிழ்வேல் 63 வயதான ஒருவரை பெண் என்று அழைப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X