சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாயின் கள்ளக்காதலன் கொலை; கூட்டாளிகளுடன் மகன் கைது

Added : நவ 19, 2019 | கருத்துகள் (16)
Advertisement
தாயின் கள்ளக்காதலன் கொலை; கூட்டாளிகளுடன் மகன் கைது

ராஜமங்கலம் : தாயின் கள்ளக்காதலனை, கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்த மகன் உட்பட, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

புழல், விநாயகபுரத்தைச் சேர்ந்தவர், அன்சர் பாஷா, 31; ஆட்டோ ஓட்டுனர். இவர் மனைவியை பிரிந்தவர். அன்சர் பாஷா ஆட்டோவில் சவாரி செல்லும் போது, அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி, 38 என்பவருடன் நட்பு ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.லட்சுமியின் மகன் பெரிய அஜித், 21, என்பவர், அன்சர் பாஷாவை கண்டித்தார். இது தொடர்பாக, 2017ல், அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலி0ல், அஜித்தின் இடது காதை, அன்சர் பாஷா அறுத்துள்ளார்.

இதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக, பெரிய அஜித், தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, 2018ல், அன்சர் பாஷாவை வெட்டினார். புழல் போலீசார், பெரிய அஜித் மற்றும் கூட்டாளிகளை கைது செய்தனர்.இந்த சம்பவத்திற்கு பின்னும், அன்சர் பாஷா, லட்சுமியுடனான தொடர்பை கைவிடவில்லை என, கூறப்படுகிறது.

இந்நிலையில், கொளத்துார் அடுத்த ரெட்டேரி சிக்னல் அருகே, நேற்று முன்தினம் இரவு, அன்சர் பாஷா, லட்சுமியுடன் ஆட்டோவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.அன்சர் பாஷாவின் தாய் மெகபூபா, 60, உடனிருந்தார். இரவு, 11:00 மணியளவில், பெரிய அஜித், கூட்டாளிகளுடன் சென்று, அன்சர் பாஷாவை ஓட ஓட விரட்டி, வெட்டி படுகொலை செய்தனர். ராஜமங்கலம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி விசாரித்தனர்.சோழவரம் அருகே பதுங்கியிருந்த பெரிய அஜித் மற்றும் அவரது கூட்டாளிகள் ஐந்து பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
24-நவ-201915:02:15 IST Report Abuse
dandy திராவிட விஷங்களின் பகுத்தறிவு ..கண்ணியம் திறமையாக பரவியுள்ளது டாஸ்மாக் நாட்டில்
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
24-நவ-201911:27:46 IST Report Abuse
Nathan மகன் செய்கை மணமுள்ளது, வீரமுள்ளது.
Rate this:
Share this comment
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
23-நவ-201918:48:32 IST Report Abuse
THINAKAREN KARAMANI ஒழுக்கமின்மையும் ஒழுக்க சீர்கேடும் கொண்ட பெண்ணால் சமுதாயத்தில் நன்கு வாழவேண்டிய இளைஞன் ஒரு கொலைகாரனாக உருவாக்கப்பட்டுள்ளது மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X