திருச்சி: சிங்கப்பூரில் இருந்து, கடத்தி வரப்பட்ட, 55.65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை, திருச்சியில் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரில் இருந்து , 'ஸ்கூட் ஏர்லைன்ஸ்' விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணியரை, கஸ்டம்ஸ் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்த, 11 ஆண்களை தனியே அழைத்து விசாரணை நடத்தினர். அவர்கள், 11 பேரும், தங்களின் உள்ளாடையில் மறைத்தும், விமான நிலையத்தில் உள்ள டிராலியில் மறைத்தும், 55.65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 1,458 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிந்து, அவற்றை பறிமுதல் செய்தனர். அவர்கள், யாருக்காக தங்கம் கடத்தி வந்தனர் என, விசாரணை நடத்தி வருகின்றனர்.