சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'அலையன்ஸ்' நிறுவன 12 விமான சேவைகள் 30 வரை ரத்து

Added : நவ 20, 2019
Advertisement

சென்னை:மதுரை, திருச்சி மற்றும் கோவை நகரங்களுக்கு இயக்கப்படும், 'அலையன்ஸ் ஏர்' விமான நிறுவனத்தின், 12 விமான சேவைகள், நேற்று முதல், 30ம் தேதி வரை, ரத்து செய்யப்படுகின்றன.

சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை நகரங்களுக்கு, 'ஏர் இந்தியா' நிறுவனத்தின், துணை நிறுவனமான, 'அலையன்ஸ் ஏர்' விமான நிறுவனம், இரண்டு ஆண்டுகளாக, ஏ.டி.ஆர்.,ரக விமானங்களை இயக்கி வந்தது. சென்னையிலிருந்து, மதுரை - 2, திருச்சி - 2 மற்றும் கோவை - 2 என, ஆறு விமானங்கள், குறைந்த கட்டணத்தில் இயக்கப்பட்டு வந்தன. இந்த ஆறு விமானங்கள், தினமும் மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களுக்கு சென்றுவிட்டு, மீண்டும் அங்கிருந்து, சென்னை திரும்பி வரும். இதனால், மொத்தம், 12 விமான சேவைகள் கிடைத்தன.

விமானங்கள் பற்றாக்குறை காரணமாக, இந்த, 12 விமான சேவைகளும், நேற்று முதல், 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, விமான நிறுவனம் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.இது சம்பந்தமாக, 'ஏர் இந்தியா' அதிகாரிகள் கூறுகையில், 'விமானங்கள் பற்றாக்குறை காரணமாகவும், போதிய பயணியர் இல்லாததாலும், இந்த விமானங்கள், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆறு விமானங்களும், அதிக பயணியர் செல்லும் மற்ற வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X