சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலில் சிக்கிய மீனவர்கள் கடலோர காவல் படை மீட்பு

Added : நவ 20, 2019
Advertisement
 கடலில் சிக்கிய மீனவர்கள் கடலோர காவல் படை மீட்பு

சென்னை:படகு பழுதால், கடலில் சிக்கி தவித்த, ஆறு மீனவர்களையும், அவர்களது படகையும், இந்திய கடலோர காவல் படை பத்திரமாக மீட்டு, கரை சேர்த்தது.

இது குறித்து, இந்திய கடலோர காவல்படை வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் ஆறு பேர், மீன் பிடிப்பதற்காக, கடலுக்கு சென்றனர். நவ., 17ம் தேதி, கன்னியாகுமரியிலிருந்து, 90 கடல் மைல் துாரத்தில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடித்தபோது, அவர்கள் சென்ற படகு பழுதாகி நின்றது.இந்திய கடலோர காவல் படையின், துாத்துக்குடி துணை மையத்திற்கு, இது குறித்த தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, கடலோர காவல் படைக்கு சொந்தமான, ஆதேஷ் கப்பல், கடலில் தவித்த மீனவர்களை மீட்க, அன்று மாலை புறப்பட்டது.

இந்த கப்பல், 18ம் தேதி காலை, 8:00 மணியளவில், பழுதான படகு நின்றிருந்த இடத்தை சென்றடைந்தது. அந்த படகில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் முயற்சியில், கடலோர காவல் படை அதிகாரிகள் ஈடுபட்டனர்; சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து, அந்த படகை கட்டி, கன்னியாகுமரி மாவட்டம் குளைச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு, ஆதேஷ் கப்பல் இழுத்து வந்து, கரை சேர்த்தது. மீனவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X