சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐ.ஐ.டி., மாணவி மரணம் தற்கொலையே கேரளாவில் தாய், சகோதரியை விசாரிக்க முடிவு

Added : நவ 20, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:ஐ.ஐ.டி., மாணவி பாத்திமா லத்தீப், தற்கொலை தான் செய்தார் என்பது, உறுதியாகி உள்ளது; அவருக்கு மனம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல் இருந்ததா என்பது குறித்து, தாய் மற்றும் சகோதரியிடம் விசாரிக்க, தனிப்படை போலீசார், கேரளா செல்ல உள்ளனர்.முதுநிலை பட்டப்படிப்புகேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், கிளிகொல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர், பாத்திமா லத்தீப், 21. இவர், சென்னை,

சென்னை:ஐ.ஐ.டி., மாணவி பாத்திமா லத்தீப், தற்கொலை தான் செய்தார் என்பது, உறுதியாகி உள்ளது; அவருக்கு மனம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல் இருந்ததா என்பது குறித்து, தாய் மற்றும் சகோதரியிடம் விசாரிக்க, தனிப்படை போலீசார், கேரளா செல்ல உள்ளனர்.

முதுநிலை பட்டப்படிப்புகேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், கிளிகொல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர், பாத்திமா லத்தீப், 21. இவர், சென்னை, ஐ.ஐ.டி.,யில், முதுநிலை பட்டப்படிப்பு படித்தார். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த இவர், 9ம் தேதி மரணமடைந்தார்.பாத்திமா லத்தீப்பின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அவரது தந்தை அப்துல் லத்தீப், தமிழக, டி.ஜி.பி., மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதற்கு ஆதாரமாக, தன் மகளது மொபைல் போனில், பதிவாகி இருந்த, சில தகவல் களை கொடுத்துள்ளார்.இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள், பாத்திமா லத்தீப் தங்கியிருந்த அறை, அவருடன் தங்கிய தோழி மற்றும் விடுதி காப்பாளரிடம், முதற்கட்ட விசாரணை நடத்தி உள்ளனர்.

மேலும், சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட, மூன்று பேராசிரியர்களுக்கும் முறைப்படி, 'சம்மன்' அனுப்பி, ரகசியமாக விசாரித்து உள்ளனர்; இதற்கிடையில், பாத்திமா லத்தீப், தற்கொலை செய்தது உறுதியாகி உள்ளதாக, போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரச்னை

இது குறித்து, அவர்கள் கூறியதாவது:பாத்திமா லத்தீப் மரணம் குறித்து, பல கோணங்களில் விசாரித்து வருகிறோம். தற்கொலை என, தெரிய வந்தது. காதல் பிரச்னை காரணமாக, அவர் தற்கொலை செய்து கொண்டாரா என, விசாரித்தோம். இல்லை என, தெரிய வந்துள்ளது. பாத்திமா லத்தீப்பின் மொபைல் போன், அவர் பயன்படுத்திய மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை, தடய அறிவியல் துறையினரின், ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். அவர்களிடம் இருந்து, எங்களுக்கு இன்னும் அறிக்கை வரவில்லை.பாத்திமா லத்தீப்பின் தோழிகள் சிலர், விடுமுறையில் உள்ளனர். அவர்களின் வீடுகளுக்கு சென்று, தனிப்படை போலீசார் விசாரிக்க உள்ளனர். பாத்திமாவுக்கு மனம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்கள் இருந்தனவா என்பது குறித்து, அவரது தாய் சுஜிதா மற்றும் சகோதரி ஆயிஷா ஆகியோரிடம் விசாரிக்க, தனிப்படை போலீசார், கேரளா செல்ல உள்ளனர்.

மேலும், அவருக்கு மத ரீதியான துன்புறுத்தல்கள் இருந்தனவா என்பது குறித்து, பாத்திமா லத்தீப்பின் வகுப்பில் படித்து வரும், அவரது மதத்தை சேர்ந்த மாணவர்களிடம் விசாரித்து வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
20-நவ-201905:49:40 IST Report Abuse
Pannadai Pandian close the matter as suicide. Don't unnecessarily trouble others especially the professors.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X