சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பாராகிளைடர்' விபத்து புதுமாப்பிள்ளை பலி

Added : நவ 20, 2019
Advertisement

சென்னை:தேனிலவுக்கு சென்றபோது, 'பாராகிளைடரில்' இருந்து விழுந்து இறந்த புது மாப்பிள்ளையின் உடல், விமானம் மூலம், சென்னைக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.

சென்னை, அமைந்தகரை, திருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், பாஸ்கரன். இவரது மகன் அரவிந்த், 27; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பிரீத்தி என்ற பெண்ணுடன், கடந்த, 10ம் தேதி திருமணம் நடந்தது.சில தினங்களுக்கு முன் தேனிலவுக்காக ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் மணாலிக்கு சென்றனர்.

மணாலி அருகே உள்ள டோபி என்ற இடத்தில், பயிற்சியாளர் ஹரு ராம் என்பவருடன், பாராகிளைடிங்கில், புதுமாப்பிள்ளை அரவிந்த் பறந்தார். அப்போது, அவரது உடலில் கட்டப்பட்டிருந்த பாதுகாப்பு பெல்ட் கழன்றதால், உயரத்தில் இருந்து அரவிந்த் கீழே விழுந்து இறந்தார். இதில் விமானி ஹரி ராமுக்கும் காயம் ஏற்பட்டது.

திருமணத்திற்காக, அரவிந்த் வீட்டின் முன் அமைக்கப்பட்டிருந்த பந்தல், நேற்று தான் அகற்றப்பட்டது. இந்நிலையில், இறந்து போன அரவிந்த் உடல், பிரேத பரிசோதனை முடிந்து விமானம் மூலம் நேற்று இரவு சென்னை கொண்டு வரப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X