சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மயிலாப்பூர் தாசில்தார் கைது

Added : நவ 20, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஆர்.ஏ.புரம் : வாரிசு சான்றிதழ் வழங்க, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, மயிலாப்பூர் தாசில்தார் கைது செய்யப்பட்டார்.மயிலாப்பூர், வெள்ளீஸ்வரன் தோட்டத்தைச் சேர்ந்தவர், ஜெகதீஸ்வரி, 42. வாரிசு சான்றிதழ் கேட்டு, ஆர்.ஏ.புரம் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.மயிலாப்பூர் தாசில்தார் சுப்பிரமணியன், 45, சான்றிதழ் வழங்க, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து, லஞ்ச
ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மயிலாப்பூர் தாசில்தார் கைது

ஆர்.ஏ.புரம் : வாரிசு சான்றிதழ் வழங்க, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, மயிலாப்பூர் தாசில்தார் கைது செய்யப்பட்டார்.

மயிலாப்பூர், வெள்ளீஸ்வரன் தோட்டத்தைச் சேர்ந்தவர், ஜெகதீஸ்வரி, 42. வாரிசு சான்றிதழ் கேட்டு, ஆர்.ஏ.புரம் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.மயிலாப்பூர் தாசில்தார் சுப்பிரமணியன், 45, சான்றிதழ் வழங்க, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், ஜெகதீஸ்வரி புகார் அளித்தார்.

போலீசார், சுப்பிரமணியனை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, ஜெகதீஸ்வரியிடம் கொடுத்து, தாசில்தாரிடம் வழங்க கூறினர்.இதன்படி, லஞ்ச தொகைக்கு முன்பணமாக, ரசாயனம் தடவிய, 10 ஆயிரம் ரூபாயை, நேற்று மதியம், தாசில்தார் சுப்பிரமணியனிடம், ஜெகதீஸ்வரி வழங்கினார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், அவர் பணத்தை வாங்கும் போது, கையும், களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து, தாசில்தார் அலுவலகத்தில், சோதனை நடத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
20-நவ-201902:40:32 IST Report Abuse
s t rajan பத்தாயிரம் அடிச்சா ஜெயில் பத்து/நூறூ/ஆயிரம் கோடிகளா அடிச்சா ஒப்பற்ற கட்சித் தலைவர் - என்ன அரசியல் தில்லு முள்ளு கலகமோ ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X