ரூ.22 கோடி சொத்து முடக்கம்| Dinamalar

ரூ.22 கோடி சொத்து முடக்கம்

Added : நவ 20, 2019
Share
புதுடில்லி:உத்தர பிரதேசம் - உத்தரகண்ட் இடையே சாலை அமைப்பதில் நடந்த முறைகேடு தொடர்பாக, வருவாய் துறை அதிகாரிகள், நில உரிமையாளர்கள் உள்ளிட்டோரின், 22 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்க துறை முடக்கியுள்ளது. உத்தர பிரதேசம் - உத்தரகண்ட் மாநிலங்களில், என்.எச்.74 என்ற, தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை அமைப்பதற்கு, நிலத்தின் சந்தை மதிப்பை விட அதிகமான விலை, நில

புதுடில்லி:உத்தர பிரதேசம் - உத்தரகண்ட் இடையே சாலை அமைப்பதில் நடந்த முறைகேடு தொடர்பாக, வருவாய் துறை அதிகாரிகள், நில உரிமையாளர்கள் உள்ளிட்டோரின், 22 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்க துறை முடக்கியுள்ளது.
உத்தர பிரதேசம் - உத்தரகண்ட் மாநிலங்களில், என்.எச்.74 என்ற, தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை அமைப்பதற்கு, நிலத்தின் சந்தை மதிப்பை விட அதிகமான விலை, நில உரிமையாளர்களுக்கு கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்காக, நில உரிமையாளர்கள், வருவாய் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், இதில், இடைத்தரகராக செயல்பட்டோரும் பலன் அடைந்ததாகவும் கூறப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய அமலாக்க துறை, உத்தரகண்ட், உ.பி., மாநிலங்களைச் சேர்ந்த சில வருவாய் துறை அதிகாரிகள், நில உரிமையாளர்கள் மற்றும் இடைத்தரகர்களின், 22 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது. இவர்கள் மீது, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X