சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துப்பாக்கி சப்ளை செய்த பீகார் வாலிபர்: அவிநாசி போலீசார் விசாரணை

Added : நவ 20, 2019
Share
Advertisement
அவிநாசி:அவிநாசியில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களுக்கு, துப்பாக்கி சப்ளை செய்த பீகார் வாலிபரிடம் அவிநாசியில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.அவிநாசியில், சில நாட்களுக்கு முன் துப்பாக்கியை காண்பித்து மிரட்டி, தங்கச்சங்கிலி, பணம், மொபைல் போன் உட்பட பொருட்ளை பறித்து சென்றது நடந்தது. எஸ்.பி., திஷா மிட்டல் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசாரின் விசாரித்தனர்.இதில், பனியன்

அவிநாசி:அவிநாசியில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களுக்கு, துப்பாக்கி சப்ளை செய்த பீகார் வாலிபரிடம் அவிநாசியில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.அவிநாசியில், சில நாட்களுக்கு முன் துப்பாக்கியை காண்பித்து மிரட்டி, தங்கச்சங்கிலி, பணம், மொபைல் போன் உட்பட பொருட்ளை பறித்து சென்றது நடந்தது. எஸ்.பி., திஷா மிட்டல் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசாரின் விசாரித்தனர்.இதில், பனியன் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த முஸ்தபா அன்சாரி, 26, ஏ.சந்தன்குமார், 33, நவலாஷ், 20, ஆர்.சந்தன்குமார், 22, ஆந்திர மாநிலம், நெல்லுாரை சேர்ந்த ஸ்ரீபிரதாப் சுனில், 25, நீலகிரி மாவட்டம், அத்திக்குன்னாவை சேர்ந்த பிரதீப்குமார், 32, ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து, இரு நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.துப்பாக்கி சப்ளைவழிப்பறி உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடும் நோக்கில், பீகாரில் இருந்து முஸ்தபா அன்சாரி, நாட்டு துப்பாக்கி, தோட்டாக்களை வாங்கி வந்தது தெரிந்தது. ஆசிக் என்பவர் துப்பாக்கி சப்ளை செய்தது தெரிந்தது.ஆசிக் குறித்து தனிப்படை போலீசார் விசாரித்த போது, பீகாரில் ஏற்கனவே குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, அங்கு சிறையில் இருப்பது தெரிய வந்தது. இதனால், பீகார் மாநிலம் சென்ற அவிநாசி தனிப்படை போலீசார், சிறையில் இருந்த ஆசிக்கை அவிநாசிக்கு அழைத்து வந்தனர்.அவரை, ஜே.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 'கஸ்டடி' எடுத்து விசாரித்தனர். அதில், முஸ்தபா அன்சாரிக்கு, துப்பாக்கி சப்ளை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.விசாரணைக்கு பின், அவரை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பீகாருக்கு அவிநாசி போலீசார் அழைத்து சென்று, கோர்ட்டில் ஒப்படைப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X