இலங்கை அதிபர் 29ல் இந்தியா வருகை

Added : நவ 20, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 இலங்கை அதிபர் 29ல் இந்தியா வருகை

கொழும்பு:இலங்கையின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள கோத்தபயா ராஜபக்சே, வரும், 29ல், இந்தியா வர ஒப்புக் கொண்டுள்ளதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இலங்கையில் புதிய அதிபராக, கோத்தபயா ராஜபக்சே, நேற்று முன் தினம் பதவி ஏற்றார். இவரை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையில் நேற்று சந்தித்து வாழ்த்து கூறினார். இந்த சந்திப்புக்கு பின், தன், 'டுவிட்டர்' சமூகவலைதள பக்கத்தில், ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது:பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில், அதிபர் கோத்தபயா ராஜபக்சேவுக்கு வாழ்த்துகளை நேரில் தெரிவித்தேன். இவரது ஆட்சியில், இந்தியா - இலங்கை இடையிலான நல்லுறவு, புதிய உயரங்களை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.புதிய அதிபரை இந்தியா வருமாறு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அந்த தகவலை, அவரிடம் தெரிவித்தேன். இதையடுத்து, வரும், 29ல், இந்தியா வருவதாக, கோத்தபயா தெரிவித்தார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
20-நவ-201920:53:30 IST Report Abuse
PANDA PANDI தமிழா எங்கே RAW.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X