மம்தாவுக்கு ஓவைசி, 'குட்டு'

Updated : நவ 20, 2019 | Added : நவ 20, 2019 | கருத்துகள் (23)
Advertisement
 மம்தா, ஓவைசி, 'குட்டு'

ஐதராபாத்: 'முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று கூறியதன் மூலம், மேற்கு வங்கத்தில் தன் பிடியை, அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி இழந்துவிட்டார் என்பது நிரூபணமாகிவிட்டது' என, ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.


மூளை சலவை







மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், மம்தா பானர்ஜி பேசியதாவது:ஹிந்து மத அடிப்படைவாதிகள் போல, நாட்டில் முஸ்லிம் பயங்கரவாதிகளும் உள்ளனர். இவர்கள் மக்களை மூளை சலவை செய்கின்றனர்.
ஹிந்து அடிப்படைவாதி களிடம் எச்சரிக்கையாக இருப்பதுபோல், மேற்கு வங்க மக்கள், இந்த முஸ்லிம் பயங்கரவாதிகளிடம் இருந்தும் விலகி இருக்க வேண்டும்.இந்த முஸ்லிம் பயங்கரவாதம், ஐதராபாத்தில் இருந்து திணிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின், எம்.பி.,யாக உள்ளார்.

அவருடைய பெயரைக் குறிப்பிடாமல், மம்தா பானர்ஜி இவ்வாறு பேசிஉள்ளார்.இதற்கு ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் அவர் கூறியுள்ளதாவது:ஐதராபாத்தில் இருந்து வருவோர் குறித்து, மம்தா கவலை தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், நிலத்தில் உள்ள, 42 தொகுதிகளில், 18 தொகுதிகளில் பா.ஜ., எப்படி வென்றது என்பது குறித்தும் அவர் தெரிவிக்க வேண்டும்.


குழப்பம்



மம்தாவின் பிடியில் இருந்து மேற்கு வங்கம் நழுவி வருகிறது. ஆட்சி அதிகாரத்தால், திரிணமுல் காங்கிரசார் திமிர் பிடித்து அலைகின்றனர். அதை திருத்துவதற்கு மம்தா முயற்சிக்கவில்லை. மாநிலத்தில் அடுத்தடுத்து தோல்வியை சந்திப்பதால், இவ்வாறு குழப்பத்தில் பேசுகிறார்.நாட்டிலேயே மேற்கு வங்கத்தில்தான் சிறுபான்மையினரான முஸ்லிம்களின் நிலை மோசமாக உள்ளது என்பதை அவர் உணர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JIVAN - Cuddalore District,இந்தியா
20-நவ-201916:53:05 IST Report Abuse
JIVAN மம்தா ஒன்றும் தவறாக கூறவில்லை. அவர் சொன்ன இரண்டும் உண்மை ஆகவே இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார் .
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
20-நவ-201916:49:46 IST Report Abuse
Endrum Indian அய்யகோ முஸ்லீம் பேகம் மும்தாஜுக்கு என்ன சோதனை இது???ஓ அவளுக்கு ஒரு ஒவைசி பாகிஸ்தான் தீவிரவாதி அட்வைஸ் செய்யும் இழிநிலைக்கு தள்ளப்பட்டு விட்டாரா??என்ன சொன்னே நீ "இந்துக்களிடையே தீவிரவாத போக்கு இருப்பதுபோல், சிறுபான்மையினரிடையேயும் தீவிரவாத போக்கு வளர்ந்து வருகிறது. ஐதராபாத்தில் ஒரு அரசியல் கட்சி உள்ளது. அது, பாஜகவிடம் பணம் வாங்கிவிட்டு செயல்படுகிறது" அதுக்குத்தான் சொல்றது அளவுக்கு மீறி முஸ்லிமை சப்போர்ட் பண்ணகூடாதுன்னு அப்போ பன்றியோடு திரிந்த கன்றின் அளவுக்கு போய் விடுவாய் என்று???நடந்துச்சா இல்லையா???என்ன முஸ்லீம் பேகம் மும்தாஜ் புரிஞ்சுச்சா இல்லையா??இவளின் இன்றைய உளறல் "இந்தியா முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவு பொருந்தும் - அமித் ஷா மேற்கு வங்கத்தில் இல்லை -மம்தா பானர்ஜி" அப்போ மேற்கு வங்கம் இந்தியாவில் இல்லை பங்களா தேஷுடன் சென்று விட்டதா???
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-நவ-201914:02:14 IST Report Abuse
Malick Raja மனிதர்களில் பெரும்பாலோர் தத்தமது வாழ்க்கை உயர்வு ,நீடிப்பு ,உல்லாசம் என பலவகைகளிலும் நிராசைகளை ஆசைப்படுகிறார்கள் அதிலும் இறப்பது என்பதை முற்றிலுமாக மறந்து ஆர்ப்பரிப்பது அவர்களின் அனுதாப நிலையை அறியாததின் வெளிப்பாடாகவே இருக்கும்.. ஒவ்வொரு மனிதனுக்கும் இறப்பு என்பது திண்ணம் என்பதை 000001%.கூட உணராமல் இருப்பதன் வெளிப்பாடுதான் சிலரின் கருத்துக்களால் வெளிப்படுகிறது யாருக்கும் இவ்வுலகமில்லை. நிரந்தரமாக நிலையம் இல்லை. எனவே மனிதநேயத்துடன் மனிதன்வாழ்ந்து மறைதலே உயர்வானதாக இருக்கும்.. அறிவிலிகளுக்கு மட்டும் விதிவிலக்கு
Rate this:
Share this comment
Kazhaga Kanmani - Chandler,யூ.எஸ்.ஏ
20-நவ-201918:09:36 IST Report Abuse
Kazhaga Kanmaniஆஹா.. ஓஹோ .. இந்த கருத்தை ஜெட்டா ஏர்போர்ட் வாசல்ல எழுதி வெச்சுட்டு அது பக்கத்துலயே ஒக்காந்துக்கங்க.. அங்கே வரும் சாவூத் குடும்பத்தார் அத படிச்சு புரிஞ்சு அதுபடி நடந்துப்பாங்க.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X