சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில் பாதையில் பாறைகள்

Added : நவ 20, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 ரயில் பாதையில் பாறைகள்

குன்னுார்:குன்னுார் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் விழுந்த ராட்சத பாறைகளை, வெடி வைத்து தகர்க்கும் பணி, துரிதகதியில் நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், 16ம் தேதி கனமழை பெய்தது. இதில், ஹில்குரோவ் ---- ஆடர்லி இடையே, ராட்சத பாறைகள், தண்டவாளத்தில் விழுந்தன. இதனால், மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.தொடர்ந்து, 17ம் தேதி, குன்னுாரில், 14 செ.மீ., மழை பதிவான நிலையில், பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அதே நாளில், காந்திபுரம், காட்டேரி, ரன்னிமேடு உள்ளிட்ட பகுதிகளில், மண்சரிவு ஏற்பட்டன; பாறைகள் உருண்டு, தண்டவாளத்தில் விழுந்ததால், 24ம் தேதி வரை, ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே பொதுப்பணித் துறை ஊழியர்கள், 50க்கும் மேற்பட்டோர், மண்சரிவை அகற்றி, பாறைகளை உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹில் குரோவ் அருகே விழுந்த ராட்சத பாறைகளை உடைக்க முடியாததால், நேற்று, வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இந்த பாறைகளை, அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
20-நவ-201911:39:05 IST Report Abuse
Harinathan Krishnanandam இந்த ஊட்டி மலை ரயில் பாதை நிரந்தரமாக பாதுகாப்புடன் இருக்க வழி செய்யப்பட வேண்டும் இல்லாவிடில் இந்த ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X