சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூளைச்சாவு வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

Added : நவ 20, 2019
Advertisement

ஆரணி:விபத்தில், மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள், தானமாக வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் பாலு. இவரது மகன் ஜெகன், 25; போளூரில் மரச்சாமான்கள் கடை நடத்தி வந்தார். இவர், நேற்று முன்தினம், உறவினர் வீட்டிற்கு, 'ஹோண்டா' பைக்கில் சென்றார்.சேவூர் பைபாஸ் சாலையில், எதிரே வந்த மற்றொரு பைக், ஜெகன் பைக் மீது மோதியது. இதில், ஜெகன் தலையில் படுகாயமடைந்தார். அவரை, சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள், ஜெகன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக தெரிவித்தனர். ஜெகனின் பெற்றோர், மகனது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். ஜெகனின் கண்கள், கல்லீரல், சிறுநீரகம், இதயம் உட்பட ஏழு உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X