சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இறந்தவர் உடலுடன் விடிய விடிய மறியல்

Added : நவ 20, 2019
Advertisement

குளித்தலை:இறந்தவர் உடலை அடக்கம் செய்ய, பாதை வழங்காததைக் கண்டித்து, குளித்தலை அருகே, உறவினர்கள் விடிய, விடிய சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, கவரப்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகர், 48, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றனர்.இந்நிலையில், 'அந்த வழித்தடத்தில், உடலை கொண்டு செல்லக் கூடாது' என, தனி நபர் ஒருவர் முட்களை போட்டு மறித்திருந்தார். இதைக் கண்டித்து, இறந்தவரின் உறவினர்கள், பாலவிடுதி போலீஸ் ஸ்டேஷன் முன், இரவு, 8:30 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.போலீசார், வருவாய் துறையினர் பேச்சு நடத்தியதை அடுத்து, மறியலை கைவிட்டு, ஆம்புலன்ஸ் வாகனத்தில் உடலை வைத்து விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ்.பி., பாண்டியராஜன், சப் - கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் மற்றும் வருவாய் துறையினர் நேற்று காலை, மீண்டும் பேச்சு நடத்தினர்.இதையடுத்து, அருகிலிருந்த காட்டு பகுதியில், முட்செடிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி, அந்த வழியாக உடலை கொண்டு சென்றனர். 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X