சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' துணைவேந்தர் மீது வழக்கு

Added : நவ 20, 2019
Advertisement
 'மாஜி' துணைவேந்தர் மீது வழக்கு

தஞ்சாவூர்:தஞ்சை தமிழ் பல்கலையில், பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக, முன்னாள் துணைவேந்தர், முன்னாள் பதிவாளர் உள்பட, நான்கு பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலையில், 2015 முதல், 2017ம் ஆண்டு வரை, துணைவேந்தராக, ஜி.பாஸ்கரன் பதவி வகித்தார். அப்போது, தகுதியற்ற நபர்கள், பேராசிரியர் பணிகளில் நியமனம் செய்யப்பட்டதாக, குற்றசாட்டுகள் எழுந்தது. அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கு, பல்கலை சார்பில், சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை.இதுதொடர்பான வழக்கில், மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணைக்கு, பல்கலை நிர்வாகம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, உத்தரவு பிறப்பித்தனர்.இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், தமிழ் பல்கலையில் விசாரணை நடத்தி, சில ஆவணங்களை கைப்பற்றி, நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.தற்போது, பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன், முன்னாள் பதிவாளர் முத்துக்குமார், நேர்முக உதவியாளர் சக்தி சரவணன், தொலைத்துார கல்வி இயக்கத்தின் இயக்குனர் என்.பாஸ்கரன் ஆகியோர் மீது, 11 பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2017 ஏப்., 26ல், 27 பேராசிரியர், 18 இணை பேராசிரியர் பணிக்காக, பல்கலை குழு சார்பில் தேர்வு நடந்தது. அதில், தகுதியற்ற, 22 நபர்கள், விதிகளை மீறி, துணைவேந்தர் பாஸ்கரன் அறிவுறுத்தியதால், தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் பாஸ்கரன், உதவியாளர் சக்தி சண்முகம் வழியாக, ஐந்து நபர்களிடம், 15 - 40 லட்சம் ரூபாய் பணம் பெற முயற்சித்தார்.பேராசிரியர் அல்லாத பணிகளுக்கு, 70 பேரை, முறைகேடாக, பதிவாளர் முத்துக்குமார், தொலைத்துார கல்வி இயக்கத்தின் இயக்குனர் என்.பாஸ்கரன் ஆகியோர், துணைவேந்தர் பாஸ்கரனின் ஒப்புதல் பெற்று நியமித்துள்ளனர். அதற்காக, பணம் தருவதாக கூறியுள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X