சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சந்தன மரம் வெட்டி கடத்தல்

Added : நவ 20, 2019
Advertisement
 சந்தன மரம் வெட்டி கடத்தல்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வனச்சரகத்தில், கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தி, ஐந்து பேர் கும்பல் சந்தன மரங்களை வெட்டி கேரளாவுக்கு கடத்தியுள்ளது. அவர்களில் இருவர், வனத்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்தில், சந்தன மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக, வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர், தம்பம்பதியை சேர்ந்த காளியப்பன், 35, மணியன், 39, ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.இவர்களுடன், மேலும் மூவர், கடத்தலில் ஈடுபட்டது தெரிந்தது. தலைமறைவாக உள்ள, மூன்று பேரை வனத்துறையினர் தேடுகின்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'கடந்த வாரம், ஆயிரங்கால் பீட்டில் புலிகள் கணக்கெடுப்பு பணிக்காக, இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. வனத்தில், சந்தன மரங்களை வெட்டி கடத்திய போது, 'பிளாஷ் லைட்' இயங்கியதை கண்ட நபர்கள், கேமராக்களை வெட்டி சேதப்படுத்தி, புதரில் வீசிச் சென்றுள்ளனர். பிடிபட்ட நபர்கள் கொடுத்த தகவலின் படி, நேற்று முன்தினம் ஒரு கேமரா மீட்கப்பட்டது' என்றனர்.கேரள வியாபாரிகள்பொள்ளாச்சி வனச்சரகம், ஆயிரங்கால் பீட்டில் வெட்டப்பட்ட மரங்களை, கேரள வியாபாரிகள் நேரிடையாக வந்து வாங்கிச் சென்றது, விசாரணையில் தெரிந்தது.கடத்தலில் ஈடுபட்ட நபர்கள், போதையில் உளறியதை கேட்டவர்கள், வனத்துறைக்கு தகவல் கொடுத்ததால், சந்தன மரம் வெட்டிக் கடத்தியது வெளிச்சத்துக்கு வந்தது.பாதுகாக்கப்பட்ட பகுதியான வனத்தில், மரங்கள் கடத்தல் தொடர்ந்து நடப்பது, பல்வேறு சர்ச்சைகளையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X