பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவர்களின் பாச போராட்டம் -ஆசிரியர் பிரிவு உபசாரத்தில் நெகிழ்ச்சி

Added : நவ 20, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
கோவை, : அரசு பள்ளியில் பணியாற்றிய கணித ஆசிரியர், வேறு பள்ளிக்கு பணியிட மாறுதலில் சென்றபோது, வழியனுப்ப மறுத்து, மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தாலுகா, வடசித்துார் அரசு மேல்நிலைப் பள்ளி, கணித ஆசிரியர் செந்தில்குமார்; 23 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வந்தார். தற்போது, பதவி உயர்வில், முதுகலை ஆசிரியராக, தொண்டாமுத்துார் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு,
பள்ளி மாணவர்களின்  பாச போராட்டம்

கோவை, : அரசு பள்ளியில் பணியாற்றிய கணித ஆசிரியர், வேறு பள்ளிக்கு பணியிட மாறுதலில் சென்றபோது, வழியனுப்ப மறுத்து, மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தாலுகா, வடசித்துார் அரசு மேல்நிலைப் பள்ளி, கணித ஆசிரியர் செந்தில்குமார்; 23 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வந்தார். தற்போது, பதவி உயர்வில், முதுகலை ஆசிரியராக, தொண்டாமுத்துார் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, பணியிட மாறுதலில் செல்கிறார். நேற்று முன்தினம், ஆசிரியர் செந்தில்குமாருக்கு பிரிவு உபசார விழா நடந்தது. அப்போது, மாணவ - மாணவியர், ஆசிரியரை சூழ்ந்து கொண்டு, 'சார் போகாதீங்க; இந்த ஸ்கூல விட்டு போகாதீங்க' என, கண்ணீர் விட்டு அழுதனர்.
இதைப் பார்த்து, ஆசிரியர்களும் கண் கலங்கினர். பிரிவு உபசார விழாவில், பிரிய மனமின்றி ஆசிரியர் செந்தில்குமார் விடைபெற்றார்.மாணவர்கள் கூறியதாவது:
மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால், பெற்றோர், மாணவர்களை அழைத்து, கவுன்சிலிங் செய்து, ஆசிரியர் செந்தில்குமார் படிக்க வைப்பார். பாடங்களை புரியும் வகையில் நடத்தினார்.இதனால், ஆசிரியர், மாணவர்கள் இடையே பாசப்பிணைப்பு ஏற்பட்டுள்ளது. சக ஆசிரியர்கள் விடுமுறையில் சென்றால், அந்த ஆசிரியரின் பாடங்களையும் சேர்த்து நடத்துவார்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
25-நவ-201917:59:49 IST Report Abuse
Nagarajan D ஆசான் எனும் சொல்லுக்கு பொருத்தமானவர். வாழ்த்துக்கள் ஆசிரியர் பெருமானே
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
24-நவ-201919:18:40 IST Report Abuse
THINAKAREN KARAMANI நல்லாசிரியர் விருதுக்குப் பொருத்தமானவர் இவர்தான். அந்த அன்பான பொறுப்புமிக்க ஆசிரியருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
22-நவ-201914:53:52 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) முழு அர்ப்பணிப்பு உணர்வோடு ஒரு சிலர் பணி ஆற்றத்தான் செய்கின்றனர் , வாழ்க நல்ல நெஞ்சங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X