பிரதமரால் புகழப்பட்டவர் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பு

Added : நவ 20, 2019
Advertisement
 பிரதமரால் புகழப்பட்டவர் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பு

மூணாறு:பிரதமர் மோடியால் 'மான் கி பாத்' நிகழ்ச்சியில் புகழப்பட்ட சின்னத்தம்பி மற்றும் ஆசிரியர் ஒருவரை மூணாறு அருகே இடமலைக்குடி மலைவாழ் மக்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

மூணாறு அருகே இடமலைக்குடியில் அடர்ந்த வனத்தில் 28 கிராமங்களில் முதுவான் இன மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். அங்கு அடிப்படை வசதிகள் குறைவு. அங்குள்ள மிளகுதரகுடியில் வசிக்கும் சின்னத்தம்பி தனது டீ கடையில் நுாலகம் போன்று புத்தகங்கள் படிப்பதற்கு வசதி செய்து கொடுத்தார்.வெளியுலகை காணாமல் அடர்ந்த வனத்திற்குள் வசித்து படிப்பின் மகத்துவத்தை உணர்த்திய சின்னத்தம்பியின் செயலை அறிந்த பிரதமர் மோடி, ஜூலையில் மான் கி பாத்' ரேடியோ நிகழ்ச்சியில் அவருக்கு புகழாரம் சூட்டினார்.மூணாறு அருகே மாங்குளத்தைச் சேர்ந்த முரளிதரன் அதே பகுதியில் ஓராசிரியர் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். அவர் இடமலைகுடி ஊரும், பொருளும்' என்ற தலைப்பில் எழுதிய நுாலில் முதுவான் இன மக்களை மோசமாக சித்தரித்துள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது.

அது குறித்து ஆலோசிக்க நவ., 14ல் முதுவான் இனத்தவர் கூட்டம் நடந்தது.அதில் 28 கிராமங்களைச் சேர்ந்த காணிகள் (ஊர் தலைவர்), ஊர் பெரியவர்கள் பங்கேற்றனர். நுால் எழுதிய முரளிதரன், அதற்கு தகவல்கள் அளித்து உதவிய சின்னத்தம்பி குடும்பங்களை, ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக முடிவு செய்தனர்.இந்நிலையில் திருவனந்தபுரத்தில் மலைவாழ் மக்கள் நலத்துறை அமைச்சர் பாலனை சின்னத்தம்பி, மனைவி மணியம்மா, ஆசிரியர் முரளிதரன் ஆகியோர் சந்தித்தனர். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்..

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X