தேனி:தேனி அருகே அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலைக்கு முயன்ற வழக்கில் சக ஆசிரியர்கள் மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் எருமலைநாயக்கன்பட்டி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் வீராச்சாமி 48. ஆண்டிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக உள்ளார். நவ. 17 ம்தேதி மாலை தனது தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.போலீசார் கூறுகையில் 'சமீபத்தில் நடந்த போராட்டத்தில் வீராச்சாமி பங்கேற்காததால் இதே பள்ளியை சேர்ந்த தமிழாசிரியர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர் செந்தில், பொருளாதார ஆசிரியர் விஜயன் ஆகியோர், அவரை கேலி செய்துள்ளனர். இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு விஷம் குடித்தாக தெரிவித்துள்ளார். அந்த மூன்று ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.