நாகப்பட்டினம்:வேதாரண்யத்தில், கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை சேர்ந்தவர் வேதராசு,55. இவரது மனைவி வசந்தா,50. இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். மூவருக்கும் திருமணமாகி, வெளியூர்களில் வசிக்கின்றனர். இதனால், வேதராசு தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர்.வேதராசு குடும்பச் செலவுக்காக, அதே பகுதியில் ஒருவரிடம், 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாக தெரிகிறது. அவர், கடனை திருப்பிக் கேட்டு, வற்புறுத்தியுள்ளார்.கடனை திருப்பிக் கொடுக்க முடியாததால், தம்பதி இருவரும் நேற்று விஷம் குடித்துள்ளனர். வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் பார்த்தபோது, இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. வேதாரண்யம் போலீசார் விசாரிக்கின்றனர்.