சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வலையை மூழ்கடித்து மீனவர்கள் கரை திரும்பினர்

Added : நவ 20, 2019
Advertisement

ராமேஸ்வரம்:நடுக்கடலில் மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை வீரர்கள் விரட்டியதால் வலைகளை மூழ்கடித்த மீனவர்கள் கரை திரும்பினர்.
நவ.,18 ல் ராமேஸ்வரத்தில் இருந்து 600 விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், இந்திய- இலங்கை எல்லையில் மீன் பிடித்தனர். அங்கு 3 ரோந்து கப்பலில் சென்ற இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் எச்சரித்து, மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டினர். இதனால் பீதியடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலையை படகில் இழுத்து படகுடன் தப்பி ஓடினர்.இதில் 10க்கு மேற்பட்ட படகுகளில் வலைகளை இழுக்க தாமதம் ஆனதால், வலைகளை வெட்டி கடலில் மூழ்கடித்து விட்டு வெறும் படகுடன் கரை திரும்பினர். இலங்கை வீரர்களின் கெடுபிடியால் படகில் மீன்வரத்து இன்றியும், வலைகள் மூழ்கடித்ததால் ஒரு படகிற்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X