முஷாரப்புக்கு மரண தண்டனையா?| Dinamalar

முஷாரப்புக்கு மரண தண்டனையா?

Updated : நவ 20, 2019 | Added : நவ 20, 2019 | கருத்துகள் (13)
 முஷாரப்,  மரண தண்டனையா?

கடந்த, 2001 - 08ல், பாக்., அதிபராக இருந்தவர் முஷாரப், 76. ராணுவ தளபதியாகவும் இருந்தார். இவர் அதிபராக இருந்தபோது, நாட்டில் சட்டவிரோதமாக அவசரநிலையை அமல்படுத்தியதாக, தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், பாக்., சிறப்பு நீதிமன்றம் விசாரணையை முடித்துள்ளது. வரும், 28ல் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. முஷாரப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை கிடைக்கலாம்.





முஷாரப், தற்போது, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில், மருத்துவச் சிகிச்சைக்காக தங்கியுள்ளார். இதை காரணமாக வைத்து, இந்த வழக்கின் விசாரணைக்கு, அவர், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X