அரசியல் செய்தி

தமிழ்நாடு

துவங்கியாச்சு 'வாட்ஸ் ஆப்'பில் பிரசாரம்

Added : நவ 20, 2019
Advertisement

செம்பட்டி : அரசியல் கட்சிகளுக்கு இணையாக, தனிநபர் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரங்கள் சமூக வலைதளங்களில் அனல் பறக்க துவங்கியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை, டிசம்பர் 2ல் வெளியிடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சில வாரங்களாக, அரசியல் கட்சிகள் ஆயத்த பணிகளை துரிதப்படுத்தி வருகின்றன. கூட்டணியில் ஒதுக்கீடு பெறுவதை, முக்கிய பதவிகளை குறி வைத்துள்ள உள்ளூர் பிரமுகர்கள் 'எதிர்பார்ப்பு'டன் உள்ளனர். கிராமங்களிலும் உள்ளாட்சித் தேர்தல், களை கட்ட துவங்கியுள்ளது. முதற்கட்டமாக, விருப்ப மனு படலம் மட்டுமே துவங்கியுள்ளது.

மனு கொடுத்தவர்கள், போட்டோ, கோரிக்கை வாசகங்களுடன் சமூக வலைதளங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.வாக்காளப் பெருமக்களுக்கு வணக்கம்... என, துவக்குகின்றனர். கட்சி சின்னம் சார்ந்த பதவி மட்டுமின்றி, ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் போட்டியாளர் வரை, வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரசாரம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X