அரசியல் செய்தி

தமிழ்நாடு

மேயர் பதவியை குறி வைத்து காய் நகர்த்தும் கட்சியினர்

Added : நவ 20, 2019
Advertisement

மதுரை : உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படாத நிலையில் மதுரையில் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் போட்டியிட விரும்புவோரிடம் விருப்பமனுக்களை பெற்று வருகின்றனர்.அ.தி.மு.க., சார்பில் நகர், புறநகர் கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் முறையே மாவட்ட செயலாளர்களான செல்லுார் ராஜூ, ராஜன்செல்லப்பா, உதயகுமார் தலைமையில் கட்சியினரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதற்காக நியமிக்கப்பட்ட தேர்தல் குழுவினரிடம் ஆளுங்கட்சியாக இருப்பதால் நுாற்றுக்கணக்கானோர் விருப்ப மனுக்களை வழங்கினர்.மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்படலாம் என்பதால் முன்னாள் கவுன்சிலர்கள் சண்முகவள்ளி, கண்ணகி, சண்முகப்பிரியா, மாஜி எம்.பி., கோபாலகிருஷ்ணன் மனைவி உள்ளிட்டோர் மனு செய்துள்ளனர். \\\
செல்லுார் ராஜூ, ராஜன்செல்லப்பா குடும்ப பெண் உறுப்பினர் பெயர்களிலும் மனு செய்யப்பட்டுள்ளது. பெற்ற மனுக்கள் மற்றும் வசூலான தொகையை மாவட்ட செயலாளர்கள் சென்னையில் கட்சி தலைமையிடம் ஒப்படைத்துள்ளனர்.தி.மு.க.,வில் எப்படி தி.மு.க., சார்பில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையில் விருப்ப மனு பெறப்பட்டன. மேயருக்கு அவரது ஆதரவாளரான முன்னாள் கவுன்சிலர் சசிக்குமார் மனைவி வாசுகி மனு செய்துள்ளார்.

அவரை வேட்பாளராக அறிவித்தால் தேர்தல் செலவுகளை ஏற்று வெற்றி பெற வைப்பதாகவும் கட்சி மேலிட தலைவர்களிடம் மூர்த்தி தெரிவித்திருக்கிறார். தவிர நகர் பொறுப்பு குழுவைச் சேர்ந்த தளபதி மகள் மேகலா, முன்னாள் கவுன்சிலர் சின்னம்மாள், பொறுப்பு குழு உறுப்பினர் ஜெயராமன் மனைவி உள்ளிட்ட பலரும் மேயர் சீட் கேட்டு விருப்ப மனு செய்துள்ளனர்.அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள தே.மு.தி.க., பா.ஜ., தங்களுக்கு மதுரை ஒதுக்க வேண்டும் என கோரி வருகின்றன.

இதற்காக இரு கட்சிகளும் விருப்ப மனு பெற்று வருகின்றன. பா.ஜ.,வில் மேயர் சீட் கேட்டு மகளிரணி மாநில தலைவர் மகாலட்சுமி, மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், தாழ்த்தப்பட்டோர் அணி செயலாளர் ஜெயச்சந்திரன், நகர் நிர்வாகிகள், சுனிதா, ராம்குமார் உள்ளிட்டோர் மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன், நகர் தலைவர் சசிராமனிடம் மனு செய்துள்ளனர்.

தே.மு.தி.க.,வில் நகர் தெற்கு, வடக்கு, புறநகர் தெற்கு, வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கவியரசு, சிவமுத்துக்குமரன், முஜிபுர் ரகுமான், கணபதி, தனபாண்டியன், வழக்கறிஞர் அணி மாநில நிர்வாகி பாண்டியன் உள்ளிட்டோர் தங்களுக்கும், மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டால் தங்கள் மனைவிகளுக்கும் சீட் கோரி விருப்ப மனு செய்துள்ளனர். கூட்டணி 'கணக்கு'அ.தி.மு.க.,வில் மேயர் சீட் கேட்டு கட்சியினருக்குள் கோஷ்டி ரீதியாக மோதல் ஏற்பட்டால் கூட்டணியில் இடம் பெற்ற தங்களுக்கு மேயர் பதவி ஒதுக்கப்படும் என தே.மு.தி.க., பா.ஜ.,வினர் எதிர்பார்க்கின்றனர். காங்., கம்யூ., பொறுத்தவரையில் தி.மு.க.,கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் பணிகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X