250 சிறுமியரை சீரழித்த டாக்டர்; சிக்கியது ரகசிய 'டைரி'

Updated : நவ 20, 2019 | Added : நவ 20, 2019 | கருத்துகள் (28)
Share
Advertisement
French, surgeon, sexually abusing,250 children

பிரான்ஸ்: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நான்கு சிறுமியரிடம், பாலியல் பலாத்காரம் மற்றும் சீண்டல்களில் ஈடுபட்டு கைதான டாக்டரிடம், போலீசார் நடத்திய விசாரணையில், அவர் 250க்கும் அதிகமான சிறுமியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


ஓய்வு:


ஐரோப்பிய நாடான பிரான்சை சேர்ந்தவர், டாக்டர் ஜோயல் லீ ஸ்கார்னெக்(68). அறுவை சிகிச்சை நிபுணரான இவர், மத்திய மற்றும் மேற்கு பிரான்சில் உள்ள மருத்துவமனைகளில், பணியாற்றி ஓய்வு பெற்றார். டாக்டர் ஜோயல், தன் வீட்டருகே வசிக்கும், 6 வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் பெற்றோர், 2017ல் புகார் அளித்தனர். இதையடுத்து, இரண்டு உறவுக்கார சிறுமியர் மற்றும் சிகிச்சை பெற வந்த சிறுமி உட்பட மேலும் மூவர், டாக்டர் மீது பாலியல் புகார் அளித்தனர். இந்த வழக்கில், டாக்டர் ஜோயலை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை, நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஜோயலின் வீட்டில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது, அவரது, 'டைரி' கைப்பற்றப்பட்டது. அதில், 250க்கும் அதிகமான பெண்கள் பெயர் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அந்த டைரியில், பெண்களை எப்படியெல்லாம் சீண்டி, தன் பாலியல் இச்சைக்கு இரையாக்கி கொண்டார் என்பதை, காட்சிகளாக விளக்கி உள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த டைரியில் குறிப்பிடப்பட்டுள்ள சிறுமியரில், 209 பேரை தொடர்பு கொண்டனர்.


latest tamil news
காம கொடூரன்:


அதில் பலர், இப்போது பெரிய பெண்களாக வளர்ந்து விட்டனர். அவர்கள் சிறுமிகளாக இருந்த போது, டாக்டர் ஜோயலால், அவர்கள் பாலியல் பலாத்காரத்திற்கும், சீண்டல்களுக்கும் ஆளானதை ஒப்புக் கொண்டனர். 'சிறுமிகளாக இருந்தபோது, பயத்தின் காரணமாக அவர்கள் வெளியே சொல்லவில்லை' என, கூறினர். டாக்டர் ஜோயல், கடந்த, 30 ஆண்டுகளாக, சிறுமியரைச் சீரழிக்கும் காமக் கொடூரனாக இருந்தது, விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு, பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
23-நவ-201903:42:01 IST Report Abuse
oce நாயை எங்கடித்தாலும் வாலை தூக்காது.காலை தூக்கி ஙொய் சவுண்டுடன் ஒடும். கல்லைக்கண்டால் நாயை காணோம். நாயை கண்டால் கல்லைக்காணோம். இது தான் நாயின் பெருமை.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
23-நவ-201903:38:11 IST Report Abuse
oce ஏண்டாப்பா ஜோயல் உன்க்கென்ன அவ்வளவு காமமா.
Rate this:
Share this comment
Cancel
mei - கடற்கரை நகரம்,மயோட்
21-நவ-201914:35:30 IST Report Abuse
mei நாய்க்கு எங்க அடிச்சாலும் வாலை தூக்குமாம். அதேமாதிரி இங்கு பதிவிடுபவர்கள் எங்கோ பிரான்ஸ் இல் நடந்த சம்பவத்துக்கு திமுகவையும் பிராமணர்களையும் இழுக்கிறார்கள்
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
22-நவ-201907:56:28 IST Report Abuse
Darmavanஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி.அவன்தான் திருப்பி அடிக்க மாட்டான். தன் உழைப்பு திறமை கொண்டு முன்னேறுவன் இது மதம் மாறி சோம்பேறிகளுக்கு /கொள்ளையர்களுக்கு பிடிக்க வில்லை. எனவே அவனை எல்லாவற்றுக்கும் தாக்குகிறார்கள். கேவலமானவர்கள்....
Rate this:
Share this comment
Indian - COIMBATORE,இந்தியா
22-நவ-201914:23:35 IST Report Abuse
Indianபொள்ளாச்சி சம்பவம் ஞாபாகம் வருதா,,,,...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X