இலவச பெட்ரோலுக்காக பிகினி அணிந்த ஆண்கள்

Updated : நவ 20, 2019 | Added : நவ 20, 2019 | கருத்துகள் (10)
Advertisement
Russian,petrol pump,offer,free fuel,bikini,பிகினி, இலவச பெட்ரோல்

இந்த செய்தியை கேட்க

மாஸ்கோ: ரஷ்யாவில் பிகினி உடை அணிந்து வருபவர்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கப்படும் என விளம்பரத்துக்காக பெட்ரோல் நிலையம் அறிவிக்க, ஆண்களும் பிகினி உடை அணிந்து வந்து இலவச பெட்ரோலை தங்கள் கார்களில் நிரப்பி சென்றனர்.

ரஷ்யாவிலுள்ள சமாரா நகரின் பெட்ரோல் நிலையம் ஒன்று, விளம்பரப்படுத்தும் நோக்கில் திறப்பு விழா சலுகை ஒன்றை அறிவித்தது. பெட்ரோல் நிலையம் திறந்த முதல் 3 மணி நேரத்திற்கு, பிகினி உடை அணிந்து வருபவர்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கப்படும் என்ற கவர்ச்சிகர திட்டத்தை அறிவித்தது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெண்களுக்கு பதில், ஆண்கள் அதிகளவில் பிகினி அணிந்து இலவச பெட்ரோலை கார்களில் நிரப்பி சென்றனர்.





'பிகினி அணிந்த பெண்கள்' என விளம்பரத்தில் குறிப்பிடாததால், பெண்களை விட ஆண்கள் அதிகளவில் பிகினியில் குவிந்ததால், கூட்டம் அலை மோதியது. ஆண்கள் பிகினியில் இருந்த போட்டோக்கள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாக, எதிர்பார்த்ததை விட அதிக விளம்பரம், அப்பெட்ரோல் நிலையத்திற்கு கிடைத்தது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
20-நவ-201915:31:09 IST Report Abuse
Girija சுடலைகள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
20-நவ-201912:52:23 IST Report Abuse
Sampath Kumar எங்க இலவசத்துக்கு பார்த்தால் இவர்கள் எதை அணிவார்கள் ?
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
20-நவ-201912:02:33 IST Report Abuse
வல்வில் ஓரி தெண்டகோன் சாயல்ல இருக்கே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X