புதுடில்லி: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி எடுத்த போட்டோ, இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்களை அள்ளியது.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்தார். இந்நிலையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பில்கேட்ஸ் உடன் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

'இருவரும் டிகிரி முடிக்கவில்லை; இனி என்ன செய்வது?' என அவர் போட்டோவுடன் பதிவிட, அது வைரலானது. பட்டப்படிப்பை பில்கேட்ஸ் பாதியில் நிறுத்தியவர். ஸ்மிருதி பட்டப்படிப்பு குறித்து தவறான தகவல் அளித்ததாக, கடந்த 2014ல் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.