இந்த செய்தியை கேட்க
சென்னை : 'திருமாவளவன் மீது, தமிழக அரசு உடனடியாக, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா, கோரிக்கை விடுத்துள்ளார்.
'டுவிட்டரில்' அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஹிந்து கோவில்கள் குறித்து, இழிவாகப் பேசிய, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது, தமிழக அரசு உடனடியாக, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 'சிவன் கோவில் மற்றும் பெருமாள் கோவில்களை இடிப்பேன், தகர்ப்பேன்' என்று பேசிய அன்றே, அவரை கைது செய்திருக்க வேண்டும்.

பிற மத உணர்வுகளை புண்படுத்தினால், அவர்கள் எப்படி எதிர்வினை ஆற்றுவரோ, அதேபோல், ஹிந்துக்களின் மத உணர்வுகள் காயப்படுத்தப்பட்டால், ஹிந்துக்கள் எதிர்வினையாற்றும் வரை, திருமாவளவன் போன்றோர் சீண்டிக் கொண்டு தான் இருப்பர். வீதிக்கு வரும் நேரமிது. இவ்வாறு, ராஜா கூறியுள்ளார்.