சபாநாயகருக்கு முத்தம் கொடுத்த காங்., எம்எல்ஏ

Updated : நவ 20, 2019 | Added : நவ 20, 2019 | கருத்துகள் (5)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புவனேஸ்வர் : ஒடிசா சட்டசபையில் சபாநாயகருக்கு காங்.,எம்எல்ஏ., ஒருவர் பறக்கும் முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






ஒடிசாவில் காங்., எம்எல்ஏ.,வான தாராபிரசாத் பகினிபதி, சட்டசபை கூட்டத்தின் போது தான் கேள்வி கேட்ட அனுமதி அளித்ததற்காக சபாநாயகர் எஸ்.என்.பட்ரோவுக்கு பறக்கும் முத்தம் கொடுத்துள்ளார். இது பற்றி தாராபிரசாத்திடம் கேட்ட போது, சபாநாயகருக்கு நன்றி தெரிவிப்பதற்காகவே நான் அவ்வாறு நடந்து கொண்டேன். மிகவும் பின்தங்கிய தொகுதியான எனது தொகுதியின் பிரச்னைகள் குறித்து பேசுவது அனுமதி அளித்ததை பாராட்டுவதற்காகவே பறக்கும் முத்தம் கொடுத்தேன். 147 உறுப்பினர்கள் இருந்த அவையில் முதல் ஆளாக கேள்வி எழுப்ப எனக்கு வாய்ப்பு அளித்ததால், அவருக்கு நன்றி செலுத்த வேண்டியது எனது கடமை என்றார்.





எம்எல்ஏ., தாராபிரசாத் இது போன்று வினோதமாக நடந்து கொள்வது இது முதல் முறையல்ல. கடந்த வாரம் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தின் முதல் நாளில் கலந்து கொள்ள அவைக்கு வந்த முதல்வர் நவீன் பட்நாயக்கை பார்த்து, புருவத்தை உயர்த்தி, கண்களாலேயே, "மகிழ்ச்சியாக உள்ளீர்களா? " என கேட்டுள்ளார். அதற்கு நவீன் பட்நாயக்கும் அதே பாணியில், "மிகவும் மகிழ்ச்சி" என பதிலளித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-நவ-201911:07:52 IST Report Abuse
இந்தியன் kumar சபைக்கு என்று நாகரிகம் இருக்கிறது அதை மீற கூடாது.
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
20-நவ-201913:38:27 IST Report Abuse
madhavan rajanசபை நாகரீகமெல்லாம் இந்த நாட்டில் கடைப்பிடிப்பதை கைவிட்டு அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது. எவ்வளவுக்கெவ்வளவு கோணங்கித்தனம் செய்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நமக்கு பப்ளிசிட்டி கிடைக்கும் காலமிது....
Rate this:
Share this comment
Cancel
20-நவ-201910:15:03 IST Report Abuse
நக்கல் இவரும் கல்யாணம் செய்துகொள்ளவில்லை போல..
Rate this:
Share this comment
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-நவ-201908:43:10 IST Report Abuse
Janarthanan கட்டி பிடிச்சு கண் அடிக்கும் காங்கிரஸ் குடும்பத்தில் வாக்க பட்டால் எல்லோரும் இளவரசர் trade மார்க் கற்று கொண்டு தான் விசுவாசமான அடிமை என்று பெயர் கிடைக்கும்????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X