சபாநாயகருக்கு முத்தம் கொடுத்த காங்., எம்எல்ஏ| Dinamalar

சபாநாயகருக்கு முத்தம் கொடுத்த காங்., எம்எல்ஏ

Updated : நவ 20, 2019 | Added : நவ 20, 2019 | கருத்துகள் (5)

இந்த செய்தியை கேட்க

புவனேஸ்வர் : ஒடிசா சட்டசபையில் சபாநாயகருக்கு காங்.,எம்எல்ஏ., ஒருவர் பறக்கும் முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






ஒடிசாவில் காங்., எம்எல்ஏ.,வான தாராபிரசாத் பகினிபதி, சட்டசபை கூட்டத்தின் போது தான் கேள்வி கேட்ட அனுமதி அளித்ததற்காக சபாநாயகர் எஸ்.என்.பட்ரோவுக்கு பறக்கும் முத்தம் கொடுத்துள்ளார். இது பற்றி தாராபிரசாத்திடம் கேட்ட போது, சபாநாயகருக்கு நன்றி தெரிவிப்பதற்காகவே நான் அவ்வாறு நடந்து கொண்டேன். மிகவும் பின்தங்கிய தொகுதியான எனது தொகுதியின் பிரச்னைகள் குறித்து பேசுவது அனுமதி அளித்ததை பாராட்டுவதற்காகவே பறக்கும் முத்தம் கொடுத்தேன். 147 உறுப்பினர்கள் இருந்த அவையில் முதல் ஆளாக கேள்வி எழுப்ப எனக்கு வாய்ப்பு அளித்ததால், அவருக்கு நன்றி செலுத்த வேண்டியது எனது கடமை என்றார்.





எம்எல்ஏ., தாராபிரசாத் இது போன்று வினோதமாக நடந்து கொள்வது இது முதல் முறையல்ல. கடந்த வாரம் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தின் முதல் நாளில் கலந்து கொள்ள அவைக்கு வந்த முதல்வர் நவீன் பட்நாயக்கை பார்த்து, புருவத்தை உயர்த்தி, கண்களாலேயே, "மகிழ்ச்சியாக உள்ளீர்களா? " என கேட்டுள்ளார். அதற்கு நவீன் பட்நாயக்கும் அதே பாணியில், "மிகவும் மகிழ்ச்சி" என பதிலளித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X