விமான டிக்கெட்டால் கோடீஸ்வரர் ஆன இந்தியர்

Updated : நவ 20, 2019 | Added : நவ 20, 2019 | கருத்துகள் (17)
Advertisement

இந்த செய்தியை கேட்க

துபாய் : அபுதாபியில் சாப்ட்வேர் கம்பெனி நடத்தி வரும் இந்தியர் ஒருவர், விமான டிக்கெட் வாங்கியதன் மூலம் கோடீஸ்வரர் ஆகி உள்ளார்.

இந்தியாவின் பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட லூயிஸ் ஸ்டீபன் மார்டிஸ் (48) என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக குடும்பத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். இவர் அபுதாபியில் ஐடி சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வழக்கமாக ஆன்லைனில் விமான டிக்கெட் வாங்குவதை, அதிலும் 666 என்ற எண்ணுடைய டிக்கெட்டை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Dubai Duty Free என்ற நிறுவனம், ஆண்டுதோறும் Dubai Duty Free Millennium Millionaire and Finest Surprise என்ற பெயரில் போட்டி ஒன்றை நடத்தி வருகிறது. இதில், விமான டிக்கெட் எண்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்படும் அதிர்ஷ்டசாலிக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்குவது வழக்கம். துபாய் விமான சாகச நிகழ்ச்சியின் 3வது நாளில், இந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டியில் மார்டிஸ் தனது ராசி எண்ணாக தேர்வு செய்த 0666 என்ற எண் தேர்வு செய்யப்பட்டது. இதனால் மார்டிஸ் குடும்பத்தினர் உற்சாகமடைந்துள்ளனர். இந்த போட்டியில் பெற்ற பரிசுத் தொகையை என்ன செய்ய போகிறீர்கள் என கேட்டதற்கு, 10 சதவீதத்தை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக அளிக்க உள்ளதாகவும், மீதமுள்ள தொகையை தனது 2 குழந்தைகளின் படிப்பிற்காக செலவிட உள்ளதாகவும் மார்டிஸ் தெரிவித்துள்ளார். மார்டிஸ் தவிர மேலும் 2 பேரும் இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.B.Tharan - Doha,கத்தார்
24-நவ-201909:54:33 IST Report Abuse
S.B.Tharan s://gulfnews.com/uae/ddf-meet-the-new-million-dollar-winner-from-abu-dhabi-whose-winning-ticket-number-666-got-him-lucky-1.1574165003567
Rate this:
Share this comment
Cancel
S.B.Tharan - Doha,கத்தார்
24-நவ-201909:54:00 IST Report Abuse
S.B.Tharan its not because of his Ticket, its the lottery ticket which is run by DUBAI DUTY FREE (DDF), not ed from his flight ticket. The lottery ticket costs Rs. 18,000. You will be ed based on the number which you have purchased and not from the flight ticket.
Rate this:
Share this comment
Cancel
vns - Delhi,இந்தியா
21-நவ-201919:11:30 IST Report Abuse
vns praj - Melbourn,ஆஸ்திரேலியா .. முதலாம் மற்றும் இரண்டாவது உலகப்போர் துவக்கியது, தன மூலம் கோடிக்கணக்கான மக்களை கொன்றது எல்லாம் கிருத்துவர்கள். அவர்களைப்போன்று உலகத்தில் மக்களை கொன்றவர்கள் யாரும் இல்லை. 'love each other' ? இதை தென் அமெரிக்காவில் கிருத்துவர்கள் கொன்று குவித்த கோடிக்கணக்கான மாயன் மற்றும் ஆதிவாசி மக்களிடம் கேட்க வேண்டும். இன்னும் படிக்கவில்லையானால் தென் அமெரிக்காவின் சரித்திரத்தை படிக்கவும்.. இன்னமும் படிக்க வேண்டுமானால் அமெரிக்காவிற்கு ஓடி வந்த கிருத்துவர்கள் எவ்வாறு சிவப்பிந்தியர்களை பெரியம்மை வியாதியுள்ள கம்பளங்களை கொண்டு கொன்று குவித்தார்கள் என்றும் படிக்கவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X