தக்காளி மாலை: பாக்., மணப்பெண் 'டிரெண்டிங்'

Updated : நவ 20, 2019 | Added : நவ 20, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மணப்பெண் ஒருவர் தக்காளியால் ஆன மாலை, ஆபரணங்கள் அணிந்து வந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த படம் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.பாக்.,ல் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து தக்காளி இறக்குமதி தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ

இந்த செய்தியை கேட்க

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மணப்பெண் ஒருவர் தக்காளியால் ஆன மாலை, ஆபரணங்கள் அணிந்து வந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த படம் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.latest tamil news


பாக்.,ல் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து தக்காளி இறக்குமதி தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.300 ஐ தாண்டியதால், சாமானிய மக்கள் தக்காளியை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தக்காளி விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில், இதனை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், பாக்.,கின் மோசமான பொருளாதார நிலையை சுட்டிக்காட்டும் வகையிலும், அந்நாட்டைச் சேர்ந்த மணப்பெண் ஒருவர், தங்க நகைகள் அணிவதற்கு பதிலாக தக்காளி நகைகளை அணிந்திருக்கிறார். கழுத்து, காது மற்றும் கைகளில் தக்காளியை கோர்த்து செய்யப்பட்ட நகையை அணிந்திருந்தார். தலையில் நெத்திச்சுட்டியாகவும் ஒரு தக்காளி அலங்கரித்திருந்தது. இவ்வாறு தங்கத்திற்கு நிகராக தக்காளியை ஒப்பிட்டிருந்த அவரது புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அந்த மணப்பெண்ணிடம் உள்ளூர் செய்தியாளர் ஒருவர் பேட்டி எடுத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் பேசும் மணப்பெண், தனது குடும்பத்தினர் தனக்கு திருமண சீதனமாக மூன்று கூடை தக்காளியை பரிசளித்திருப்பதாக கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
21-நவ-201907:50:19 IST Report Abuse
கதிரழகன், SSLC சொந்தமா தக்காளி விவசாயம் செய்ய தெரியல ... நம்ம ரேஞ்சுக்கு ராணுவம்
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
20-நவ-201918:11:04 IST Report Abuse
vnatarajan நல்லவேளை பூஷணிக்கா விலை ஏறவில்லை.போல் இருக்கிறது. விலை ஏறி அதை அணிந்திருந்தால் எப்படி இருக்கும்னு நினைத்து பார்க்கவே பயமா இருக்கு
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
20-நவ-201917:46:27 IST Report Abuse
Nathan முகத்தில் உயிர்ப்போ அழகோ இல்லையே, ஆப்கான் அடர்த்தி புருவமும், கழுகு மூக்குமோ? பெட்டெர் புர்கா அச்சா ஹை.
Rate this:
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
20-நவ-201921:54:26 IST Report Abuse
Nallavan Nallavanஇங்கே நீங்க பாக்குறது விதிவிலக்கு ...... பாக் பெண்களின் அழகு புகழ் பெற்றது .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X