நட்பைவிட மக்கள் நலனுக்காக இணைவோம்: கமல்

Updated : நவ 20, 2019 | Added : நவ 20, 2019 | கருத்துகள் (38) | |
Advertisement
சென்னை: நானும், ரஜினியும் நட்பைவிட தமிழக நலனுக்காக தேவைப்பட்டால் இணைவோம், தமிழகத்திற்காக உழைப்போம் என மக்கள் நீதி மையம் தலைவர் கமல் மீண்டும் உறுதியாக கூறியுள்ளார்.திரையுலகில் இருந்து அரசியலுக்குள் நுழைந்த கமல், மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கினார். அவரின் நீண்டகால நண்பரும் சக நடிகருமான ரஜினி, விரைவில் கட்சி தொடங்க இருப்பதாக கூறி வருகிறார். சமீபத்தில் நடந்த
KamalHaasan, RajiniKanth, MNM, கமல், ரஜினி, மக்கள்நீதிமையம், தமிழக நலன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: நானும், ரஜினியும் நட்பைவிட தமிழக நலனுக்காக தேவைப்பட்டால் இணைவோம், தமிழகத்திற்காக உழைப்போம் என மக்கள் நீதி மையம் தலைவர் கமல் மீண்டும் உறுதியாக கூறியுள்ளார்.

திரையுலகில் இருந்து அரசியலுக்குள் நுழைந்த கமல், மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கினார். அவரின் நீண்டகால நண்பரும் சக நடிகருமான ரஜினி, விரைவில் கட்சி தொடங்க இருப்பதாக கூறி வருகிறார். சமீபத்தில் நடந்த பல நிகழ்வுகளில் இருவரும் இணைந்து செயலாற்றுவது குறித்து பல்வேறு விதமாக கூறிவந்தனர்.


latest tamil news


இந்நிலையில், நேற்று (நவ.,19) சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த கமல், தமிழகத்தின் மேம்பாட்டிற்காக, ரஜினியுடன் சேர்ந்து பயணிக்க வேண்டியது வந்தால் இருவரும் இணைவோம், என்றார். அதேபோல், ரஜினியும், ''தமிழக மக்கள் நலனுக்காக, நானும், கமலும் இணைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், நிச்சயமாக இணைவோம்'', என்றார்.


latest tamil news


இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்து மக்கள் நீதி மையம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் கமல் பேசியதாவது:
எனக்கும், ரஜினிக்கும் இடையேயான 44 ஆண்டு நட்பை விட, தமிழகத்தின் நன்மை தான் முக்கியம். நாங்கள் இணைவது என்பது நட்பை விட முக்கியமான செய்தி. அந்த செய்தி என்னவெனில், தமிழக நலனுக்காக தேவைப்பட்டால், சேர்ந்து உழைப்போம் என்பது தான். என்னுடைய பணியை நான் செயலில் காட்டுவேன். இவ்வாறு கமல் பேசினார்.
கமல் மீண்டும் உறுதியாக கூறியதையடுத்து இருவரும் இணைந்து வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
21-நவ-201910:38:16 IST Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  ரஜினிக்கு மாஸ் உண்டு.. மக்களை கவரும் நல்ல வசீகரம் உண்டு.. கமல் எதை செய்தாலும் அதை நல்ல முறையில் செய்து முடிக்க என்னும் ஒரு உழைப்பாளி.. எனக்கென்னமோ அந்த காலத்தில் கருணாநிதி (கமல்) + எம்ஜிஆர் (ரஜினி) போன்ற உணர்வு ஏற்படுகிறது.. கருணாநிதி நல்ல திறமைசாலிதான் ஆனால் குடும்பத்தாரால் பொதுநலம் மறந்து தன்னலம் நாடி எம்ஜிஆரை இழந்தார்.. கமல் அந்த மாதிரி குடும்ப வலைக்குள் சிக்க மாட்டார்.. நல்ல உழைப்பாளி.. கமல் கொஞ்சம் நாவை அடக்கி அனைத்து மதமும் சம்மதம் என்ற நிலைக்கு வந்தால் ரஜினியின் உதவியால் அரியணை ஏற வாய்ப்பு உண்டு. ரஜினியும் மக்களுக்கு ஏதாவது திரும்ப நன்றி கடன் செய்யவேண்டும் என்ற என்ன ஓட்டத்தில் உள்ளார்.. கமலை கொஞ்சம் கண்ட்ரோல் செய்து அவரது நாத்திக பேச்சை குறைத்து இருவரும் சேர்ந்து காலம் கண்டால், வெற்றி நிச்சயம்.. காரணம் மக்கள் திமுகவின் மீதுள்ள வெறுப்பில் வேறு வழியில்லாமல் ரெண்டாவது சாய்ஸ் அதிமுகவிற்கு வாக்களிக்கின்றனர்.. இருவரும் இணைந்து வரும்போது மக்களுக்கு மாற்றம் வேண்டி புதிய எழுச்சி எதிர்பார்க்கலாம்..ஜைஹிந்..
Rate this:
Cancel
20-நவ-201921:44:03 IST Report Abuse
தேவதாஸ் பூனே ரஜினி-க்கு புத்தி ஏன் இப்படி போவுது.....???
Rate this:
Cancel
20-நவ-201921:42:44 IST Report Abuse
தேவதாஸ் பூனே யாருடைய நலனுக்காக.....????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X