ஆப் மூலம் ஆம்ஆத்மியில் இணைந்த ஆர்வலர்கள்

Added : நவ 20, 2019 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி : டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் துவக்கிய 'AK' மொபைல் ஆப் மூலம் சுமார் 20,000 க்கும் அதிகமான ஆர்வலர்கள் ஆம்ஆத்மி கட்சியில் இணைந்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் பங்கஜ் குப்தா தெரிவித்துள்ளார்.இது பற்றி பங்கஜ் குப்தா கூறுகையில், இந்த ஆப் இதுவரை 50,000 முறைக்கு மேல் டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது. இது மக்களுடன் நேரடியாக தொடர்பில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் துவக்கிய 'AK' மொபைல் ஆப் மூலம் சுமார் 20,000 க்கும் அதிகமான ஆர்வலர்கள் ஆம்ஆத்மி கட்சியில் இணைந்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் பங்கஜ் குப்தா தெரிவித்துள்ளார்.latest tamil newsஇது பற்றி பங்கஜ் குப்தா கூறுகையில், இந்த ஆப் இதுவரை 50,000 முறைக்கு மேல் டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது. இது மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருப்பதால் கட்சிக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இதற்கு முன் வெளியானது பா.ஜ.,வின் கண்ணோட்டத்தில் உருவான புள்ளிவிபரம். ஆனால் இந்த ஆப் மூலம் நாங்கள் நேரடியாக மக்களை தொடர்பு கொண்டு, எங்கள் தரப்பு கருத்துக்களை கூறி வருகிறோம். இந்த ஆர்வலர்கள் ஒருநாளைக்கு ஒன்று முதல் 2 மணிநேரத்தை கட்சிக்காக அர்ப்பணித்தாலே போதும், என்றார்.


latest tamil newsஆம்ஆத்மி கட்சிக்கு எதிராக வதந்திகள் மற்றும் போலியான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க கெஜ்ரிவால், கடந்த மாதம் இந்த ஆப்பை அறிமுகம் செய்தார். டில்லி அரசு மற்றும் ஆம்ஆத்மிக்கு எதிராக பரப்பப்படும் வதந்திகளுக்கு இந்த ஆப் மூலம் கெஜ்ரிவால் பதிலளித்து வருகிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டில்லி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக மக்களிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக கெஜ்ரிவால் இந்த ஆப்பை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
20-நவ-201914:01:22 IST Report Abuse
elakkumanan இணைந்த பின்னால் ஆப்பு வைப்பதற்கு பதில், ஆப்பு மூலமாக இணைந்திருக்கிறார்கள். நல்ல தொடக்கம். கெஜ்ரி......நீயெல்லாம் இன்னும் எதுக்கு இருக்க? நம்புன மக்களுக்கு, நல்ல கம்பா பாத்து கொடுத்த நீ இருப்பதும் ...
Rate this:
Cancel
20-நவ-201913:39:00 IST Report Abuse
நக்கல் ஆம் ஆத்மிக்கு ஆப்பு...
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
20-நவ-201912:14:06 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     இவர் என்ன IRS ஓ தெரியவில்லை அங்கு இலவசம் இங்கு இலவசம் என்று டெல்லியை நாறடிக்கிறான் இவன் வீடு சொந்த பணத்தை கொடுங்கள் இலவசங்கள் கொடுத்து நாட்டை காலி ஆக வேணாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X