வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் துவக்கிய 'AK' மொபைல் ஆப் மூலம் சுமார் 20,000 க்கும் அதிகமான ஆர்வலர்கள் ஆம்ஆத்மி கட்சியில் இணைந்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் பங்கஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

இது பற்றி பங்கஜ் குப்தா கூறுகையில், இந்த ஆப் இதுவரை 50,000 முறைக்கு மேல் டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது. இது மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருப்பதால் கட்சிக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இதற்கு முன் வெளியானது பா.ஜ.,வின் கண்ணோட்டத்தில் உருவான புள்ளிவிபரம். ஆனால் இந்த ஆப் மூலம் நாங்கள் நேரடியாக மக்களை தொடர்பு கொண்டு, எங்கள் தரப்பு கருத்துக்களை கூறி வருகிறோம். இந்த ஆர்வலர்கள் ஒருநாளைக்கு ஒன்று முதல் 2 மணிநேரத்தை கட்சிக்காக அர்ப்பணித்தாலே போதும், என்றார்.

ஆம்ஆத்மி கட்சிக்கு எதிராக வதந்திகள் மற்றும் போலியான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க கெஜ்ரிவால், கடந்த மாதம் இந்த ஆப்பை அறிமுகம் செய்தார். டில்லி அரசு மற்றும் ஆம்ஆத்மிக்கு எதிராக பரப்பப்படும் வதந்திகளுக்கு இந்த ஆப் மூலம் கெஜ்ரிவால் பதிலளித்து வருகிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டில்லி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக மக்களிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக கெஜ்ரிவால் இந்த ஆப்பை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.