வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழக அரசியலில் எப்போதுமே வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது கூட்டணியும், ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள ஓட்டு சதவீதமும் தான். இப்படியான நிலையில் தமிழக நலனுக்காக ரஜினியும், கமலும் இணைந்து பயணிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்கள் இப்படி பேசுவதற்கு பல்வேறு கணக்குகள் போடப்படுகின்றன.


இந்திய அளவை ஒப்பிடும்போது, கல்வி அறிவு அதிகம் உள்ள தமிழக மக்கள் எப்போதுமே ஓட்டளிப்பதில் விபரமானவர்கள். பெரும்பாலும் தங்கள் கட்சியை மாற்ற மாட்டார்கள். அரிதாக, அன்றைக்கு நிலவும் சூழ்நிலையைப் பொறுத்து, கட்சியை மாற்றி ஓட்டளிப்பர். தங்கள் கோபத்தை காட்டிய பிறகு, அடுத்த தேர்தலில் மீண்டும் பழைய கட்சிக்கு ஓட்டளிப்பர்.
அதிமுகவையும், திமுகவையும் அணைப்பதும், அவ்வப்போது அடிப்பதும் இதனால் தான். எனவே தான், தமிழகத்தின் இந்த இரு பெரும் கட்சிகள், தமிழக மக்களை கொஞ்சம் அச்சத்துடனேயே அணுகுவது வழக்கம்.


ஓட்டு சதவீதம்:
திமுக: 2014 லோக்சபா தேர்தலில் பெற்றது 23%, 2016 சட்டசபை தேர்தலில் பெற்றது 31%, 2019 லோக்சபா தேர்தலில் பெற்றது 32%. அதிமுக: 2014 சட்டசபை தேர்தலில் பெற்றது 44%, 2016 சட்டசபை தேர்தலில் பெற்றது 41%, 2019 லோக்சபா தேர்தலில் பெற்றது 18.48%.
இந்த சதவீதங்கள் இப்படி இருந்தாலும், இவை எல்லாமே மக்களின் கோப, தாபங்களுக்கு ஏற்ப மாறியவை. ஆனால் சராசரியாக எடுத்துக்கொண்டால், அதிமுகவுக்கு 32-34 சதவீதமும், திமுகவுக்கு 25 - 28 சதவீத ஓட்டுகளும் இருக்கின்றன.
இது குறித்து அரசியல் நிபுணர்கள்கூறியதாவது:
கடந்த லோக்சபா தேர்தலில் கமல் கட்சி பெரு நகரங்களில் சராசரியாக 8 சதவீத ஓட்டுகளைப் பெற்றது. ரஜினி அரசியலுக்கு வந்தால் எப்படியும் 16 சதவீத ஓட்டுகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. (விஜயகாந்த் முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்டபோது 13 சதவீத ஓட்டுகளைப் பெற்றார். அதை விட ரஜினி நிச்சயம் அதிக ஓட்டுகளைப் பெறுவார்).


ரஜினி, கமலை சேர்த்தால் 24 சதவீத ஓட்டுகள் வருகின்றன. அதிமுக, திமுகவில் ரஜினி, கமலின் ரசிகர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். அதிமுகவில் இருந்து குறைந்தபட்சம் 8 சதவீதம், திமுகவில் இருந்து 6 சதவீதம், மற்ற குட்டி கட்சிகளிடம் இருந்து 4 சதவீத ஓட்டுகள் இவர்களுக்கு கிடைத்தால் 42 சதவீதம் வருகிறது. ஆக, இந்த கணக்கு சரியாக நடந்தால், இவர்கள் இணைந்து ஆட்சியைப் பிடிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement