இந்த செய்தியை கேட்க
சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக.,வினர் அச்சத்தில் உள்ளனர். உள்ளாட்சி தேர்தலை தடுப்பதற்கான முயற்சியில் திமுக இறங்கி உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி குறித்து தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிடும்.
அதிமுக கூட்டணி முன்பு ரஜினி, கமல் இணைப்பெல்லாம் தூள்தூளாகும். ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாயபிம்பங்கள். அவர்கள் தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள். அரசியல் கானல் நீர் போன்று காணாமல் போய்விடுவார்கள். அஜித் கண்ணியமானவர். தொழில் பக்தி மிக்கவர். அதிமுக கூட்டணி முன்பு ரனிஜி-கமல் இணைப்பெல்லாம் தூள்தூளாகும். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

உதயகுமார்
அமைச்சர் உதயகுமார் பேசுகையில், யாரும் யாருடன் வேண்டுமானாலும் சேரட்டும். அது அதிமுக போன்ற வலுவான கட்சியை ஒன்றும் செய்ய முடியாது. ஒன்றும், ஜீரோவும் சேர்ந்தால்தான் அது நம்பர். யாரு முட்டை, யாரு நம்பர் என நான் சொல்லவில்லை. முட்டையும், முட்டையும் சேர்ந்தால் அது முட்டைதான். அதை இந்த மொட்டை சொல்கிறேன் (உதயகுமார் மொட்டை அடித்துள்ளார்). இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE