மறைமுக மேயர் தேர்வு : ஓபிஎஸ் மறுப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மறைமுக மேயர் தேர்வு : ஓபிஎஸ் மறுப்பு

Added : நவ 20, 2019
Share
சென்னை : சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படவில்லை. அதிமுகவின் அடித்தளம் பலமாக இருப்பதால் ரஜினியுடன், கமல் இணைவதால் எங்கள் கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை. மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை என்றார். பின் மதுரை

சென்னை : சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படவில்லை. அதிமுகவின் அடித்தளம் பலமாக இருப்பதால் ரஜினியுடன், கமல் இணைவதால் எங்கள் கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை. மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை என்றார்.

பின் மதுரை விமான நிலையத்தில் பேசிய ஓபிஎஸ், தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்காக அமெரிக்க தொழில் அதிபர்களிடம் பேசியுள்ளோம். 58ம் கால்வாய் தொடர்பாக கருணாநிதி ஆட்சி காலத்தில் தவறான அறிக்கை வெளியிட்டனர். அதை எவ்வாறு சரிசெய்து என்பது குறித்து ஆய்வு நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி தொடரும். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகள் சில இடங்களை கேட்பார்கள். அனைவரும் இணைந்து ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்படும், என்றார்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X