பொது செய்தி

இந்தியா

ரூ.2000 நோட்டு புழக்கம் சரிவு

Updated : நவ 20, 2019 | Added : நவ 20, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : நாட்டில் வருமான வரி சோதனையின் போது ரூ,2000 நோட்டுகள் பிடிபடுவது குறைந்துள்ளது. இதே போன்று ரூ.2000 புழக்கமும் நாட்டில் குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.latest tamil newsபார்லி.,யில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மூன்று நிதியாண்டுகளில், வருமானவரித்துறை சோதனையின்போது, ரூ.5 கோடிக்கும் மேலாக கைப்பற்றப்பட்ட ரொக்கம் தொடர்பான தரவுகள், ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதில், உயர் மதிப்புக் கொண்ட ரூ.2000 நோட்டுகள் கைப்பற்றப்படுவது, ஆண்டுக்காண்டு சரிவை சந்திப்பது தெரியவந்துள்ளது. 2017-18 ம் நிதியாண்டில் ரெய்டின் போது பிடிபட்ட ரூ.2000 நோட்டுக்களின் அளவு 67.9 சதவீதமாகவும், 2018-19 ல் 65.9 சதவீதமாகவும் இருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டில் இந்த அளவு 43.2 சதவீதமாக சரிந்துள்ளது என்றார்.


latest tamil news


2017 ம் ஆண்டு மார்ச் மாதம் புழக்கத்தில் விடப்பட்ட ரூ.2000 நோட்டுக்களின் புழக்கம் கடந்த ஆண்டு பாதியாக குறைந்தது. தற்போது ரூ.2000 நோட்டுக்களின் புழக்கம் 31 சதவீதமாக குறைந்துள்ளது. 2018 ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.6.7 லட்சம் கோடியாக இருந்த ரூ.2000 நோட்டுக்களின் எண்ணிக்கை, 2019 ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.6.6 லட்சம் கோடியாக சரிந்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபர கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-நவ-201900:09:01 IST Report Abuse
ஆப்பு கூடிய சீக்கிரம் அஞ்சு, பத்து ரூவாக் கூட புழக்கத்தில் இருக்காது போலிருக்கு.
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
20-நவ-201921:08:29 IST Report Abuse
Krishna Its Shame for Rulers That Citisens Have No Confidence on Indian Currencies But Prefer US Dollars
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
20-நவ-201919:50:35 IST Report Abuse
Siva இதை ஒன்றரை வருடம் முன்பு சொன்னார் திரு சிவா அவர்கள்... ஒருவேளை ட்விட்டரில் சொல்லி இருந்தால் செல்லுமா..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X