இருக்கையை காணோம்; சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

Updated : நவ 20, 2019 | Added : நவ 20, 2019 | கருத்துகள் (25)
Share
Advertisement
புதுடில்லி: ராஜ்ய சபாவில், 3வது வரிசையில் இருந்த தன் இருக்கையை 5வது வரிசைக்கு மாற்றியதாக சிவசேனா எம்பி., சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.மஹாராஷ்டிரா தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜ., - சிவசேனா கட்சிகள் முதல்வர் பதவிக்கு போட்டி போட்டதால், கூட்டணியை முறித்தது. இதனால், இரு கட்சியினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், டில்லியில் இன்று (நவ.,20)
RajyaSabha, ShivSena, SanjayRaut, Seat, Allotment, ராஜ்யசபா, சிவசேனா, சஞ்சய்ராவத், இருக்கை

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: ராஜ்ய சபாவில், 3வது வரிசையில் இருந்த தன் இருக்கையை 5வது வரிசைக்கு மாற்றியதாக சிவசேனா எம்பி., சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.

மஹாராஷ்டிரா தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜ., - சிவசேனா கட்சிகள் முதல்வர் பதவிக்கு போட்டி போட்டதால், கூட்டணியை முறித்தது. இதனால், இரு கட்சியினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், டில்லியில் இன்று (நவ.,20) நடந்த ராஜ்ய சபா கூட்டத்தில், சபைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம், சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் கடிதம் அளித்தார்.


latest tamil news


அந்த கடிதம் குறித்து சஞ்சய் கூறியதாவது: பாஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் எதிர்கட்சியில் இருந்தபோது, எனது வயது மூப்புத்தன்மையை கருத்தில் கெண்டு ராஜ்ய சபாவில் எனக்கு 3வது வரிசையில் இருக்கை வழங்கப்பட்டது. ஆனால், இப்போது, வேண்டுமென்றே 5வது வரிசையில் இருக்கை ஒதுக்கியுள்ளனர். இது, சிவசேனா கட்சியின் உணர்வுகளை புண்படுத்தவும், கட்சியின் அந்தஸ்தை அவமானப்படுத்தவும், எங்கள் குரலை அடக்குவதற்கும் யாரோ இந்த முடிவை எடுத்துள்ளதாக நினைக்கிறேன். இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SELF -  ( Posted via: Dinamalar Android App )
24-நவ-201904:41:11 IST Report Abuse
SELF உங்கள் தலையில்நீங்களே மண்ணை வாரி போட்டுக் கொண்டு இப்போது ஒப்பாரி வைத்து என்ன பயன்?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-நவ-201903:52:01 IST Report Abuse
J.V. Iyer இவர் அமைச்சர் இல்லை என்றால், அதற்கு உரிய மரியாதைதான் தரப்படும். இது தெரியாதா?
Rate this:
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
20-நவ-201920:23:01 IST Report Abuse
dandy பூ இதென்ன பிரமாதம் எங்கள் டாஸ்மாக் நாட்டில் கட்டிய கிணறுகளையே காணோம் ..அனால் ஒதுக்கப்படட பணம் எடுக்கப்பட்டு விட்ட்து
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X