
புட்டபர்த்தியில் நடந்து வரும் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் 94வது ஜெயந்தி விழாவின் ஒரு கட்டமாக இன்று மலைவாழ் மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

மலைவாழ் மக்கள் எளிமையானவர்கள் நேர்மையானவர்கள் மிகவும் அன்பானவர்கள் பழமையை போற்றுபவர்கள் அவர்களி்ன் அன்பை அபரிமிதமாக பெற்றவர் பாபா



ஊட்டியில் உள்ள மலைவாழ் மக்களான படுகர்களின் முன்னேற்றத்திற்கும் அவர்கள் வாழ்வாதாரத்திற்கும் நேரடியாக உதவியவர் பாபா என்பதை தெரிவித்த விழாக்குழுவினர் மற்ற மாநில மலைவாழ் மக்களுக்கு என்ன என்ன உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன என்பதையும் தெரிவித்தனர்.


12 மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர் ஊட்டியில் இருந்து மட்டும் ஐநுாறுக்கும் அதிகமான படுக இன மக்கள் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் கம்பளி போர்வை உள்ளீட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.விழா நிறைவாக மலை வாழ் மக்களின் பராம்பரிய நடனங்கள் இடம் பெற்றன
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE