அரசியல் செய்தி

தமிழ்நாடு

சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த முயற்சி : ஸ்டாலின்

Updated : நவ 20, 2019 | Added : நவ 20, 2019 | கருத்துகள் (30)
Share
Advertisement
அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின்  திடீர் ஆலோசனை

சென்னை: சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த முயற்சி நடப்பதாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் உள்ள திமுக அலுவலகத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் கட்சி பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வரப்போகும் உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சி தலைவரை கவுன்சிலர்கள் மறைமுகமாக தேர்வு செய்வதற்கான அவசர சட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.


latest tamil news


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்: மறைமுகமாக தேர்தல் நடத்துவதன் மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த முயற்சி நடக்கிறது. தி.மு.க., ஆட்சியில் அரசியல் சூழ்நிலை காரணமாக மறைமுகமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தினோம். உள்ளாட்சியில் உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது என்பதனால் மறைமுகமாக தேர்தல் முறை மாற்றப்பட்டது. மறைமுக தேர்தல் நடத்துவதற்கு அவசர சட்டம் பிறப்பத்துள்ளது கண்டிக்கத்தக்கது. மறைமுக தேர்தல் குறித்து அமைச்சரவை யில் பேசவில்லை என ஓ.பி.எஸ் கூறினார். ஓ.பி.எஸ் கூறியதற்கு மாறாக மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டம் பிறப்பிக்கபப்ட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், முதல்வரை எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்கின்றனர். பிரதமரை எம்.பி.,க்கள் தேர்வு செய்கின்றனர். அதுபோல் தற்போது, மேயரை, கவுன்சிலர்கள் தேர்வு செய்கின்றனர். ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட வழிகளின்படியே உள்ளாட்சி தேர்தல் நடக்கும். சட்டத்திற்கு உட்பட்டு உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. திமுக ஆட்சி காலத்தில் தான், கவுன்சிலர்கள் தான் மேயரை தேர்வு செய்தனர். 2006 ல் திமுகவும் மறைமுக தேர்தலை தானே நடத்தியது. தேர்தல் முறை மாறினாலும், உள்ளாட்சி தேர்தல் நடப்பது உறுதியாகியுள்ளது என்றார்.

ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமெனில் நேரடிதேர்தல் நடத்த வேண்டும்: முத்தரசன். இந்திய கம்யூனிஸ்ட்

ஜனநாயகத்தை அரசு வளைக்கப்பார்க்கிறது: கே.எஸ்.அழகிரி. காங்.,

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
21-நவ-201906:24:33 IST Report Abuse
Subramanian Sundararaman அவசர சட்டத்திற்கு எதிராக வழக்கு போட்டு உள்ளாட்சி தேர்தலை இன்னும் இரண்டு ஆண்டுகள் தள்ளி போடலாம் . கூட்டணி கட்சிகளிடையே சண்டை குழப்பம் வராது . சட்ட சபை தேர்தல் வரையாவது தள்ளி போட்டால் ஒன்றும் குடி மூழ்கிவிடாது . ஆளும் கட்சியினர் உள்ளூராட்சி தேர்தல் நடத்தவில்லை என அடுத்த சட்ட சபை தேர்தலில் பிரச்சாரம் செய்யலாம் . அடுத்த ஆளும் கட்சி உள்ளூராட்சி தேர்தலிலும் வெற்றிபெறும் . பணநாயகமா , ஜனநாயகமா என்று தொலைக்காட்சிகள் பட்டிமன்றம் நடத்தலாம் . நமக்கும் பொழுது போகும் .அல்லது புது மக்கள் கணக்கெடுப்பு , எல்லை வரையறை , தனி தொகுதிகள் , பெண்கள் ஒதுக்கீடு என்று ஏதாவது காரணம் கூறி கால அவகாசத்தை நீட்டிக்கொண்டு போகலாம் . ஒன்று நிச்சயம் . மக்களுக்கு எதுவும் நடக்காது .
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
20-நவ-201921:57:20 IST Report Abuse
A.George Alphonse இவர்களுக்கு மஜோரிட்டி இருக்கு இது போல் செய்ய.அன்று அவர்கள் செய்தார்கள். இன்று இவர்கள் செய்கிறார்கள்.வழி காட்டி யாரு.இப்போது எதுக்கு புலம்பல். கம்முன்னுஇரு.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-நவ-201921:55:56 IST Report Abuse
Natarajan Ramanathan சூரியன் அஸ்தமித்துவிட்டது.... இப்போது எதுக்கு சுடலை குருட்டு கண்ணாடியோடு அலையுது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X