தேசியம் பேட்டி

Added : நவ 20, 2019
Advertisement
 தேசியம் பேட்டி

அகதிகளாக்க முடியாது!

தேசிய குடியுரிமை பதிவேடு என்ற பெயரில், மாநிலங்களில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்தில், குடியுரிமை பதிவேடு வெளியிட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மதங்களின் பெயரில் பிரிவுகளை ஏற்படுத்தி, குடியுரிமையை பறித்து, உங்களை யாரும் அகதிகளாக்க முடியாது. மம்தா பானர்ஜிமுதல்வர், மேற்கு வங்கம், திரிணமுல் காங்.,'

டிஜிட்டல்' போர்!

இந்த நாடு பேராபத்துக்களைசந்திக்கும் வேளையில், கடற்படை வீரர்களின் பங்கு தவிர்க்க முடியாதது. போர், இயற்கை பேரிடர், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் என, எதுவாக இருந்தாலும், மக்களை பாதுகாக்கும் பணியில், நம் வீரர்கள் திறம்பட செயலாற்று கின்றனர். நாம், 'டிஜிட்டல்' உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எதிர்கால அச்சுறுத்தல்கள், தகவல் தொழில்நுட்ப வடிவில் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இதை மனதில் கொண்டு, கடற்படைக்கு, அதிநவீன உபகரணங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.ராம்நாத் கோவிந்த்ஜனாதிபதி
யார் கொடுத்த நிதி?

தேர்தல் பத்திரம் விற்பனை திட்டத்துக்கு, ரிசர்வ் வங்கி மற்றும் சி.பி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தும், அதை மீறி, பா.ஜ., அரசு அதை நடைமுறைபடுத்தியது. இத்திட்டம், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதில், வெளிப்படை தன்மையை அழித்துவிட்டது. பண பரிமாற்ற மோசடிக்கு வழிவகுத்துள்ளது. எந்தெந்த நிறுவனங்கள், பா.ஜ.,வுக்கு எவ்வளவு நிதி அளித்தது என்ற முழு விபரம், பார்லி.,யின் இரு சபைகளிலும் தாக்கல் செய்யப்பட வேண்டும். குலாம் நபி ஆசாத்மூத்த தலைவர், காங்.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X